அமலா பால் அம்மாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்.. வித்தியாசமான உடையில் நடிகை ஷேர் செய்த போஸ்ட்!
சென்னை: நடிகை அமலா பால் வித்தியாசமான உடையில் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். வந்த வேகத்தில் விஜய், சூர்யா, தனுஷ் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.
நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றார். அவர் நடித்த படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்றது.

சரிந்த மார்க்கெட்
ஆனால் எப்போது நடிகை அமலா பால் ஆடை படத்தில் நடித்தாரோ அப்போதே அவரது மார்க்கெட் மளமளவென சரியத் தொடங்கிவிட்டது. அதற்கு காரணம் ஆடை படத்தில் அவர் நிர்வாண கோலத்தில் நடித்ததுதான். ஆடை படத்தில் நடித்த பிறகு, ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் அமலா பால்.

இரண்டாவது திருமணம்
அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் ஒப்பந்தமானதாக தெரியவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது நீண்ட நாள் காதலரை இரண்டாவது திருமணம் செய்த நடிகை அமலா பால், அதன் பிறகு, சமூக வலைதளங்களில் தான் பிஸியாக உள்ளார்.

நண்பர்களுடன் ஜாலி
அடிக்கடி டிவிட்டரிலும் இன்ஸ்டாகிராமிலும் தத்துவம் பேசி வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் அமலா பால். அதோடு தனது ஹாட் போட்டோக்களையும் நண்பர்களுடன் ஜாலியாய் பொழுதை போக்கும் போட்டோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

ஜூட் மெட்டீரியல்
இந்நிலையில் நடிகை அமலா பால் வித்தியாசமான ஒரு உடையில் ஒரு ரகமாக போஸ் கொடுத்துள்ளார். ஜூட் மெட்டீரியல் போன்ற உடையில் தலைமுதல் கால் வரை போர்த்தியப்படி நிற்கிறார். அமலா பாலா இது என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு உள்ளது அந்த போட்டோ.
Recommended Video

நம்பர் 1 ஆக வேண்டும்
அந்த போட்டோவுக்கு, "அம்மா சொல்கிறார் நீ நம்பர் ஒன் ஆக வேண்டும் என்று" என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் இப்போது வேறு ஏதாவது புராஜெக்ட்டில் வேலை பார்க்கிறீர்களா? உங்களுடைய படம் ஏதாவது வரப்போகிறதா என கேள்வி கனைகளை தொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











