Amala paul: பாய் பிரண்டுடன் மோசமான உடையில் இருந்த அமலாபால்.. முகம் சுளிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை அமலா பால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாளுக்கு நாள் படுமோசமான போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.
சிந்து சமவெளி படத்தில் உலகமே தெரியாத பெண் போல, பாவாடை தாவணியில் அறிமுகமான நடிகை அமலா பால், முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்ஸ் மனதில் பதிந்து விட்டார்.

இவ்வாறு இவர் மனதில் பதிந்ததற்கு காரணம், அட்டாகாசமான நடிப்பு எல்லாம் இல்லை, மாமனாரையே காதலிக்கும் விவகாரமான கதையில் துணிந்து நடித்ததால் பிரபலமானார்.
நடிகை அமலா பால்: சிந்து சமவெளி படத்தைத் தொடர்ந்து மைனா படத்திலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தார். ஆனால், முதல் படத்தைப் போல இல்லாமல் இந்த படத்தில் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்ததால், கோலிவுட் சினிமா பிரியர்களுக்கு பிடித்த கதாநாயகி ஆனார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

விவாகரத்து செய்தார்: இதைத் தொடர்ந்து, குறுகிய காலத்திலேயே விக்ரம், விஜய், ஆர்யா, சித்தார்த், தனுஷ், சூர்யா என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். பின் தெய்வத்திருமகன் பட இயக்குநர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணத்திற்கு பின், சினிமாவில் நடிக்கக்கூடாது என்று நிபந்தனையுடன் திருமணம் செய்து கொண்ட அமலா பாலால் நீண்ட காலம் இந்த நிபந்தனை தாக்குப்பிடிக்க முடியாமல் அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடித்தார்.
ஆண் நண்பர்களுடன் நெருக்கம்: விவாகரத்துக்குபின் ஆடை என்ற படத்தில் ஆடையே இல்லாமல் நிர்வாணமாக நடித்து பெயரை கெடுத்துக்கொண்டார். அது மட்டுமில்லாமல் நண்பர்களுடன் பொது இடத்தில் குடித்துவிட்டு ஆட்டம் போட்டது, ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக இருந்த போட்டோ போன்றவை இணையத்தில் பரவி அமலா பாலின் பெயரை டேமேஜ் ஆக்கியதால், அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக படவாய்ப்பே இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார்.

நீச்சல் உடையில்: அமலாபால் தயாரித்த கடாவர் திரைப்படம் வெளியானதற்கு பிறகு, இவர் மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார். படவாய்ப்பு இல்லாததால் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அமலா பால் தற்போது, மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். அண்மையில் கோவாவில் ஒரு குளத்தில் நீச்சல் உடையில் ஆட்டம் போட்டா போட்டோக்களை ஷேர் செய்திருந்தார்.
ஆண் நண்பர்களுடன்: தற்போது இரண்டு ஆண் நண்பர்கள் இருக்கும் போது, படு கவர்ச்சியான உடையில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் ஆண் நண்பர்கள் இருக்கும் போது இப்படி ஒரு கவர்ச்சி உடையாக என்றும், மீண்டும் பெயரை கெடுத்துக்கொள்ள போகிறார் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











