Amala paul: அந்த நடிகர்களா அப்படி… நம்ப முடியல? நடிகை அமலா பால் ஷாக்!

கேரளா: மலையாள சினிமாவில் இருந்து அதிர்ச்சியில் ஆழ்த்தும் தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன. யாருமே எதிர்பார்க்காத சில பிரபல நடிகர்களின் பெயர்கள் வெளியே வந்துள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது என நடிகை அமலா பால் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

பிரபல நடிகையான அமலா பால், மருத்துவமனையின் வாட்டர் பெர்த்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கர்ப்ப காலம் பற்றி பேசினார். அதில், இந்த மருத்துவமனையில் தான் எனக்கு குழந்தை பிறந்தது. என் கர்ப்பகாலம் முழுவதும், பிரசவமான பிறகும் இந்த மருத்துவனை எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தது. நான் கர்ப்பிணியானபோது, வாட்டர் பெர்த்திற்காக முயற்சித்து, நிறைய இடங்களில் விசாரித்தேன். ஆனால் கேரளாவில் இந்த மருத்துவமனையில் தான் வாட்டர் பெர்த் முறைக்கு சிறப்பான மருத்துவமனையாக உள்ளது என்றார்.

hema committee kerala cinema amala paul

கவலை அடைந்தேன்: இதைத்தொடர்ந்து செய்தியாளர், மலையாள சினிமாவில் புயலை வீசி வரும் ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமலா பால். உங்களைப் போல ஹேமா கமிஷன் அறிக்கையைப் பார்த்து நான் மிகவும் அதிர்ச்சி அடைந்து, மன உளைச்சலுக்கு உள்ளானேன். யாருமே எதிர்பார்க்காத சில பிரபல நடிகர்களின் பெயர்கள் வெளியே வந்துள்ளது. பெரும் புயலை கிளப்பி இருக்கும் இந்த விவகாரம், பரபரப்பாக பேசப்பட்டு திடீரென்று மறைந்து போகாமல், பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும்.

வலிமையான பெண்கள்: மேலும், இந்த விஷயம் வெளியில் வருவதற்கு பின் வலிமையான பெண்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த பெண்களின் கடினமான உழைப்பால், இன்று இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது போன்ற பிரச்சனைகளில் சிக்கிய பெண்கள் தானாக முன் வந்து பேச வேண்டும். மீண்டும் பாலியல் அத்துமீறல் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நட்சத்திர அமைப்புகள் உட்பட பெண்களே தலைமைப் பொறுப்பில் இருக்க வேண்டும். அனைத்து துறைகளிலும் 50 சதவீதம் பெண்கள் வர வேண்டும் என்று கேரள அரசுக்கு அமலா பால் கோரிக்கை வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X