கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல்.. அருவியில் அட்டகாசம் செய்த அமலாபால்!
சென்னை: நடிகை அமலா பால் கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல் அருவியில் குதித்து ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.
2009-ம் ஆண்டு வெளியான நீலதாமரை என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அமலா பால், தொடர்ந்து வீரசேகரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களுமே அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால், அந்த படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நடிகை அமலாபால்: சிந்து சமவெளி படத்தைத் தொடர்ந்து மைனா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பேமஸ் ஆனார். அப்படத்தில் முத்த காட்சி சரியாக வராததால் 20 டேக் சென்றதாகவும், இதற்காக நடிகர் விதார்த்துக்கு தனியாக பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூட அமலா பால் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
விவாகரத்து செய்தார்: அதன் பின் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், உள்ளிட்ட நடிகர்கள் பலருடன் நடித்திருந்த அமலாபால் சமீப காலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இதையடுத்து ஏ.எல். விஜயை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு சில நாட்கள் விலகி இருந்த அமலா பால், அவரை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார்.

சர்ச்சையில் சிக்கினார்: ஆடை படத்தில் ஆடையே இல்லாமல் பல காட்சிகளில் நடித்து கெட்ட பேர் எடுத்த அமலா பாலுக்கு ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் போனதால் இருக்கும் இடம் தெரியாமல் இருந்தார். தன்னை வைத்து யாரும் படம் எடுக்காததால், அமலா பாலோ கடாவர் என்ற படத்தை தயாரித்து ஓடிடியில் வெளியிட்டார்.அந்த படம் பாராட்டை பெற்ற நிலையில் தொடர்ந்து அம்மணிக்கு வசந்த காலம் வீசிவருகிறது.

அருவியில் குதித்து ஆட்டம்: எப்போதும் சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதிர வைத்து வரும் அமலா பால், இன்ஸ்டாகிராமில் ஐந்த மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கிறார். தற்போது அவர் அருவியில் குதித்து ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலர், கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல் இப்படியா ஆட்டம் போடுவீங்க என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











