ஆடை படம் பார்க்க போறீங்களா.. ரெடியா இருங்க.. வெளியே வரும்போது ஒரு இன்ப அதிர்ச்சி இருக்கலாம்!

Recommended Video

Aadai Public review | Aadai Review

சென்னை: ஆடை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு படக்குழு ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்து வருகிறது.

அமலா பால் நடிப்பில் ஆடை திரைப்படம் பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை வெளியானது. படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்ற செய்தியே படத்திற்கு பெரும் விளம்பரமாக அமைந்தது.

அமலா பால் நிர்வாணமாக நடித்ததை படம் ரிலீஸாவதற்கு முன்பு பலரும் விமர்ச்சித்தனர். ஆனால் படம் ரிலீஸான பிறகு அது அப்படியே உல்டாவாக மாறியது.

தூற்றிய வாய்கள்

தூற்றிய வாய்கள்

காரணம் அமலா பாலின் நடிப்பும் கடின உழைப்பும் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது. படத்தை பார்த்தவர்கள் அமலா பாலை புகழ்ந்து தள்ளியுள்ளனர். அமலா பாலை தூற்றிய வாயெல்லாம் இன்று போற்றுகிறது.

ரசிகர்களிடம் பேட்டி

ரசிகர்களிடம் பேட்டி

இந்நிலையில் ஆடை படம் பார்க்கும் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அதாவது, ஆடை படம் ஓடும் தியேட்டர்களில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் படக்குழு பேட்டி எடுக்க ஏற்பாடு செய்துள்ளது.

மைக்குடன் அமலா பால்

மைக்குடன் அமலா பால்

பேட்டி எடுப்பது வழக்கமான விஷயம்தான். ஆனால் ஆடை படத்தை பொறுத்தவரை பேட்டி எடுப்பது, நடிகை அமலா பாலாம். பல தியேட்டர்களில் ரசிகர்களின் கருத்தை கேட்க அமலா பாலே நேரடியாக சென்று பார்த்து வருபவர்களின் முன்பு மைக்கை நீட்டுகிறாராம்.

யாருக்குதான் பிடிக்காது?

யாருக்குதான் பிடிக்காது?

இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடுகின்றனராம். தான் கடினமாக உழைத்து, தமிழ் திரையுலகில் எந்த நடிகையும் எடுக்காத ரிஸ்க்கை எடுத்து ஆடை படத்தில் நடித்திருக்கிறார் அமலா பால். அந்த வெற்றியை ருசியை நேரடியாக அனுபவிக்க யாருக்குதான் பிடிக்காது?!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X