வியர்க்க... விறுவிறுக்க... இதற்காகத்தான் அந்த வீடியோவை வெளியிட்டாரா அமலா பால்?
Recommended Video
சென்னை: நடிகை அமலா பால் இந்தி படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் கடுமையான உடற்பயிற்சி செய்துவருகிறார்.
தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் அமலா பால்.
ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மலையாளம், தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து அவரும் அமலா பால், இப்போது, அதோ அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார்.

ஆடுஜீவிதம்
இந்தப் படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கிடையே, மலையாளத்தில் பிருத்விராஜுடன் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார்.

இந்தி படம்
லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற வெப் சீரிஸின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருகிறார். இதையடுத்து இந்தி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதில் அவருக்கு முக்கியமான வேடம் என்று கூறப்படுகிறது.
உடற்பயிற்சி
எக்சர்சைஸை மையப்படுத்திய படம் என்பதால், இதற்காகச் சிறப்பு உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் அமலா பால்.

எக்சர்சைஸ் வீடியோ
சமீபத்தில், அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். கடுமையாக அவர் எக்சர்சைஸ் செய்யும் வீடியோ அது. எதற்காக இவ்வளவு கடுமையான ஒர்க் அவுட் என்ற கேள்வி அப்போது எழுந்திருந்தது.
எதற்காக?
இந்தி படத்துக்காகத்தான் அவர் இப்படி செய்கிறார் என்ற தகவல் இப்போது தெரிய வந்துள்ளது. படம் பற்றிய தகவலை அவர் வெளியிட மறுத்துள்ளார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











