பார்க்கும் போதே சாப்பிட தோனுதே.. அமலா பால் ஷேர் செய்த வீடியோ.. எச்சில் ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை அமலா பால் தனது தோழிகளுடன் சேர்ந்து சிக்கன் சமைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மலையாள நடிகையான அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார் அமலா பால்.
கடைசியாக ஆடை படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்தார். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்.

குட்டி ஸ்டோரி படம்
அதன்பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வந்தார் அமலா பால். இந்நிலையில் நடிகை அமலா பால், குட்டி ஸ்டோரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

கிளாமர் போட்டோ ஷூட்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அமலா பால் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களாக படு கிளாமராக போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் அமலா பால்.

கன்னாபின்னா கவர்ச்சி
மீண்டும் பழையப்படி பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டி போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார். அவற்றை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தோழிகளுடன் கோழிக்கறி சமையல்
இந்நிலையில் நடிகை அமலா பால் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எச்சில் ஊற்றி வருகின்றனர். அதாவது நடிகை அமலா பால் தோழிகளுடன் சேர்ந்து கோழிக்கறி சமைத்துள்ளார்.

சாப்பிட தோனுதே..
மசாலா போட்டு பிரட்டிய சிக்கனை குக்கரில் போட்டு வேக வைத்து அசத்தலாய் தட்டில் காட்டி தோழிகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளார். அமலா பால் சமைத்துள்ள சிக்கன் ஃபிரையை பார்த்த ரசிகர்கள் பார்க்கும் போதே சாப்பிட தோன்றுகிறதே என எச்சில் விட்டுள்ளனர்.
Recommended Video

வைரலாகும் வீடியோ
சிலர் நீங்கள் செய்வதை பார்த்து பிரியாணி என்று நினைத்தேன், சிக்கன் ஃபிரையை தான் இப்படி செய்தீர்களா என கலாய்த்துள்ளனர். அமலா பாலின் இந்த கோழிக்கறி சமையல் வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











