‘ஏஜெண்ட்’ படத்திற்காக காட்டுத்தனமாக உடலை மாற்றிய அமலாவின் மகன்… ஆத்தாடி என வாய்பிளந்த ரசிகர்கள் !

ஆந்திரா : நடிகர் அகில் அக்கினேனி தான் நடித்து வரும் ஏஜெண்ட் திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்து உடலை காட்டுத்தனமாக மாற்றியுள்ளார்.

இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அகில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் அகிலை பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

முன்னணி நடிகை

முன்னணி நடிகை

நடிகை அமலா 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தார். மைதிலி என்னைக் காதலி, வேலைக்காரன், சத்யா, அக்னி நட்சத்திரம் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அமலாவின் மகன்

அமலாவின் மகன்

1992ம் ஆண்டு தெலுங்கு ஸ்டார் நாகார்ஜூனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாகசைத்தன்யா மற்றும் அகில் அகினேனி என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் நாக சைத்தன்யாவை நடிகை சமந்தா திருமணம் செய்து கொண்டுள்ளார்.

காதல் படங்கள்

காதல் படங்கள்

அகில் அகினேனி 2015ம் ஆண்டு வெளியான அகில் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவே வந்தார். இந்த திரைப்படத்தை அடுத்து Hello, Mr Manju, Most Eligible bachelor போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால் இந்த திரைப்படங்கள் அனைத்தும் காதல் திரைப்படங்களாகவே இருந்தன. இதனால் இவருக்கு திரையில் பெரிதாக வாய்ப்பு இல்லை.

கட்டுமஸ்தான உடல்

கட்டுமஸ்தான உடல்

தற்போது அகில், ஏஜெண்ட் என்ற ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார். இதற்காக கடுமையாக உழைத்து உடம்பை தாறுமாறாக டெவலப் செய்துள்ளார். நேற்று அகில் ஏஜெண்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படத்தை வெளியிட்ட, தன்னுடைய கட்டுமஸ்தான் அமைப்பு தெரியும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் உடம்பை பார்த்தா அங்கங்கே அப்படியே கட்டு கட்டாக மாஸாக உள்ளது.

உளவாளியாக

உளவாளியாக

ஏஜெண்ட் திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்க உள்ளார். தமன் இசையமைக்கிறார். பெரும் பொருட் செலவில் உருவாகும் இப்படத்தில் அகில் ஒரு உளவாளி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X