Amala paul: நான் என்னை இழந்திருந்தேன்.. எதுவும் தெரியல, ஏமாத்திட்டாங்க.. புலம்பிய அமலாபால்

சென்னை: அமலா பால் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல கசப்பான அனுபவங்களை பற்றி பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

தன்னுடைய வாழ்க்கையில் தான் ஏமாற்றப்பட்டு விட்டேன் என்று தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை தான் மறக்க நினைப்பதாகவும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.

Actress Amalapal Shared her sad Past Life

அத்தோடு தன்னுடைய சினிமா வாழ்க்கை மற்றும் நிஜ வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் குறித்தும் பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் அமலா பால் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டிருந்தார். பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர். நடிகை அமலா பால் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிகை அமலாபால் முன்பு பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் இரண்டு வருடங்கள் எந்த படங்களில் நடிக்காமல் தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி வந்தது குறித்து அதில் பேசியிருக்கிறார். அதாவது இரண்டு வருஷம் நான் வீட்டில் இருந்தபோது என்னை விட என்னுடைய அம்மா தான் அதிகமாக கவலைப்பட்டார்.

Actress Amalapal Shared her sad Past Life

ஆனால் எனக்கு அந்த மாதிரி ஒரு வருத்தம் இல்லை. 13 ஆண்டுகளாக நிறைய வேலை செய்து விட்டேன். ஆனால் அப்போ எனக்கு மகிழ்ச்சியே இல்லை. எதையோ தேடி ஓடிக்கொண்டே இருந்தேன். ஒன்றன்பின் ஒன்றாக என்னுடைய ஓட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. நான் என்னுடைய வெற்றியை எப்போதுமே கொண்டாடவில்லை. ஏனென்றால் அன்று என்னோடு யாருமே இல்லை. நான் என்னையே இழந்திருந்தேன் என்று தான் சொல்ல வேண்டும்.

மைனா படத்திற்குப் பிறகு என்னுடைய சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. நான் மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டேன். அதுதான் என்னுடைய பிரச்சனையாக இருந்தது. ஒருவேளை எனக்கும் எல்லோருக்கும் இருப்பது போன்ற ஆரோக்கியமான குழந்தை பருவம் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை நல்ல வழியாக மாறி இருக்கும். எனக்கு ஒரு வழிகாட்டி இருந்திருந்தாலும் நான் அதை சமாளித்து இருப்பேன்.

Actress Amalapal Shared her sad Past Life

ஆனால் நான் நல்ல மனநிலையில் இல்லாததால் தான் எனக்கு தோல்விகள் வந்தது. 2020 ஆம் ஆண்டு கொரோனாவிற்கு பிறகு வாழ்க்கையில் முதல்முறையாக நான் எங்கும் செல்லாமல் எல்லோரும் வீட்டில் இருப்பது போல நானும் இருந்தேன். பறப்பது, துப்பாக்கி சூடு இல்லை. இதனாலேயே எனக்கு அதிகமான நேரம் கிடைத்தது. அப்போதுதான் என்னை நானே புரிந்து கொள்ள முடிந்தது.

நம்முடைய மனதில் இருந்து தொடங்கும் சிந்தைகளால் தான் நாம் என்ன மாதிரி ஆகப் போகிறோம் என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்த நேரத்தில் நான் ஏமாற்றப்பட்டேன் அல்லது ஏமாற்றப்பட்டுட்டேன் என்று தான் சொல்ல வேண்டும். நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை. மனம் சரியாக இருந்தால் தான் சுற்றுப்புறமும் சரியாக இருக்கும் என்பது புரிந்து கொண்டு தான் என்னுடைய வாழ்க்கையை நான் இப்போது ஓட தொடங்கி இருக்கிறேன்,, என்று அந்த வீடியோவில் அமலாபால் பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X