இதையெல்லமா ஷேர் பண்ணுவாங்க.. ஜாக்குலினின் கார்பன் காப்பி அமண்டா செர்னியின் ஹாட் லிப்லாக்!
சென்னை: பிரபல அமெரிக்க நடிகையான அமண்டா செர்னி ஷேர் செய்திருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதையெல்லாமா பப்ளிக்ல போடுவாங்க என கேட்டுள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகை அமண்டா செர்னி. நடிகையாக மட்டுமின்றி பிரபல மாடலாகவும் உள்ளார்.
உலகளவில் சோஷியல் மீடியாவில் அதிகம் பின்தொடரப்படும் பெண் என்ற பெருமைக்கு உரியவர் அமண்டா. அசப்பில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் போலவே இருப்பதால் இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பிரபலமானவர்.

சூடான போட்டோக்கள்
இன்ஸ்டாகிராமில் மட்டும் அமண்டாவை இரண்டரை கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்கர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வப்போது சூடான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் அமண்டா.

பாரபட்சம் இல்லாமல்
அவர் ஷேர் செய்யும் வீடியோக்களும் போட்டோக்களும் அடுத்த சில நிமடங்களிலேயே லட்சக்கணக்கில் லைக்ஸ்களை குவிக்கும். எந்த கஞ்சத்தனமும் பாரபட்சமும் இன்றி சகல போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடிப்பார்.

40 லட்சம் லைக்ஸ்
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காதலருடன் கண்ணைக் கட்டிக் கொண்டு பைக் ஓட்டும் வீடியோவை ஷேர் செய்திருந்தார். அந்த வீடியோ, 40 லட்சம் வரையிலான லைக்ஸ்களை குவித்தது. அந்த வீடியோவின் சூடு அடங்குவதற்குள் மேலும் ஒரு வீடியோவை வெளியிட்டு திக்குமுக்காட செய்துள்ளார்.

படுக்கையறையில்..
அதாவது காதலருடன் படுக்கையறையில் லிப்லாக் கொடுத்திருக்கிறார் அமண்டா. அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.அவரது இந்த வீடியோவை 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.
Recommended Video

தீயாய் பரவும் வீடியோ
மேலும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வர்ணித்துள்ளனர். அமண்டாவின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதேபோல் பிகினியிலும் அரைகுறை உடையிலும் பல கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்துள்ளார் அமண்டா.


Click it and Unblock the Notifications











