இனிமே யாருக்கும் இப்படி நடக்க கூடாது.. நடிகை அம்பிகாவிடம் கதறி அழுத ரிதன்யாவின் தாய்!

சென்னை: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் ரிதன்யா என்பவர் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிதன்யாவிற்கும் கவினுக்கும் ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த பின் அவிநாசியை அடுத்த பழங்கரையில் உள்ள கவின்குமார், ரிதன்யா தம்பதி வாழ்ந்து வந்த நிலையில், சேயூர் அருகே மொண்டிபாளையம் செல்லும் வழியில் சாலையோரம் காருக்குள் ரிதன்யா விஷம் அருந்திக் ஜூன் 28ந் தேதி தற்கொலை செய்துகொண்டார். ரிதன்யா உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்நிலையில், நடிகை அம்பிகா ரிதன்யாவின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், ரிதன்யாவின் தற்கொலை செய்தியை கேட்ட நாளில் இருந்தே எனக்கு தூக்கமே வரவில்லை, என்னுடைய குடும்பத்தில் இப்படி ஏதாவது நிகழ்ந்திருந்தால் எப்படி என் மனநிலை இருக்குமோ, அதே போல தான் என்னுடைய மனநிலை இருக்கிறது. ஒரு கொடூரமான மரணம் நிகழ்ந்திருக்கிறது. அதற்கு இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் வேதனை அளிக்கிறது. மற்ற நாடுகளில் செய்வதுபோல இங்கும் கடுமையான தண்டனை கொடுத்தால், அடுத்து இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் இருக்கு.

Rithanya Ambika
Photo Credit:

நடிகை அம்பிகா: ரிதன்யாவிற்கு போராடுவதற்கு அப்பா, அம்மா, தம்பி இருக்கிறார்கள். ஆனால், எத்தனையோ ஏழைப் பெண்கள் இதை வெளியில் சொன்னால் என்ன ஆகும் என்ற பயத்தில் இருக்கிறார்கள். தயவு செய்து தவறு செய்தவர்களுக்கு இனியும் தாமதப்படுத்தாமல், தண்டனை வாங்கித் தரவேண்டும். ஒரு நாயை காப்பாற்றுவதற்கு கூட, ஆட்கள் இருக்கிறார்கள். இதற்காக போராடுவதற்கு என ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், ரிதன்யா என்ற பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டால், அதற்கு நியாயம் கிடைப்பதற்கு ஒருவர் கூட போராட வில்லை. அதற்கு நியாயம் வாங்கி தருவதற்கு ஒருவர் கூட இல்லை. அதற்கு மாறாக அந்த பெண் அப்படி செய்து இருக்கலாம், இப்படி செய்து இருக்கலாம் என்று பேசாமல், இனியும் இதுபோல மரணம் நடக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். சிலரின் கண்ணீரை பார்த்து மகிழ்ச்சி அடைவதற்கு என்று சில பேர்இங்கு இருக்கிறார்கள் என்று நடிகை அம்பிகா ஆதங்கப்பட்டு பேசினார்.

More from Filmibeat

Read more about: ambika அம்பிகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X