டிவிட்டரில் இணைந்த பிரபல சீனியர் நடிகை.. அறிமுகப்படுத்தினது யாருன்னு பாருங்க மக்களே!
சென்னை: பிரபல சீனியர் நடிகையான அம்பிகா டிவிட்டரில் இணைந்துள்ளார்.
1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் சகோதரிகளான அம்பிகா மற்றும் ராதா ஆகியோர் ஆவார்.
இவர்கள் இருவருமே ரஜினி, கமல், விஜயகாந்த் உட்பட முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
நடிகை அம்பிகா கடைசியாக 2018ஆம் ஆண்டு வெளியான எஸ்ஏ சந்திரசேகரின் ட்ராபிக் ராமசாமி படத்தில் நடித்தார். நடிகை அம்பிகா தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இதேபோல் ராதாவும் டான்ஸ் நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக இருந்து வருகிறார்.

கார்த்திகா வரவேற்பு
இந்நிலையில் நடிகை அம்பிகா டிவிட்டரில் இணைந்துள்ளார். நடிகை ராதாவின் மகளான நடிகை கார்த்திகா நாயர் திறமையான நடிகையை சமூக ஊடகங்களுக்கு வரவேற்றுள்ளார். மேலும் அவரை சமூக ஊடக உலகிற்கு வரவேற்குமாறு நெட்டிசன்களை வலியுறுத்தியுள்ளார்.

முன்னணி நடிகர்கள்
அம்பிகா, சினிமாவில் பீக்கில் இருந்த போது தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

லாக்டவுனில் டிவிட்டர்
நடிகை அம்பிகா ஏற்கனவே பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் அவ்வப்போது தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் பழைய படங்கள் மற்றும் கதைகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் லாக்டவுன் நேரத்தில் அம்பிகா டிவிட்டரில் இணைந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications