நடிகை அம்பிகாவுக்கு மேக்கப் மேனாக மாறிய பிரபல நடிகர்.. திடீரென வைரலாகும் போட்டோ!
சென்னை: நடிகை அம்பிகாவுக்கு நடிகர் சிவகுமார் மேக் அப் போட்டுவிட்ட போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை அம்பிகா 1978 ஆம் ஆண்டு முதல் 1989 வரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், மோகன் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடா, தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் அம்பிகா தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

நான் பாடும் பாடல்
அதாவது நடிகை அம்பிகாவுக்கு நடிகர் சிவகுமார் மேக்கப் போட்டு விடுகிறார். 1984ஆம் ஆண்டு சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான நான் பாடும் பாடல் படத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோதான் அது. இந்தப் படத்தில் சிவகுமார், மோகன், அம்பிகா, பாண்டியன் ஆகியோர் லீடிங் ரோலில் நடித்துள்ளனர்.

த்ரோபேக் போட்டோஸ்
இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியின் போது எடுக்கப்பட்ட போட்டோ ஆகும். நடிகை அம்பிகா சமீப காலமாய் சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார், மேலும் தனது இளம் வயது நாட்களில் படத்தில் நடித்த த்ரோபேக் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

என் ஹீரோ..
அந்த வகையில் நடிகர் சிவகுமார் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்காக தனக்கு மேக்கப் போட்டு விட்டதை அண்மையில் அவர் வெளிப்படுத்தினார். அதில் "நான் பாடும் பாடல். க்ளைமாக்ஸ் காட்சி. என் ஹீரோ எனக்கு பர்ன்ட்லுக் மேக்கப் செய்தார். (என் மேக் மேன் நெமம் சந்திரன் நாயர் அவருக்கு அருகில் இருக்கிறார்) என குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த ஓவியர்
நடிகர் சிவகுமார் சினிமாவில் முன்னணி நடிகர் ஆவதற்கு முன்பே சிறந்த ஓவியராக இருந்தார். நடிகர் சிவகுமார் 1959 ஆம் ஆண்டு முதல் 1965 ஆம் ஆண்டு வரை சென்னையில் உள்ள அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியின் மாணவராக இருந்தார். மூத்த நடிகரான இவர் இதுவரை 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











