அசுர வேகத்தில் கொரோனாவிலிருந்து மீண்டார் அம்மு அபிராபி!
சென்னை : அசுரன் பட நடிகை அம்மு அபிராமி கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்.
மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டில் தனிமையில் இருந்தேன்.
தற்போது மேற்கொண்ட சோதனையில் நெகட்டிவ் என வந்து இருப்பதாகவும் அம்மு அபிராமி கூறியுள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரிப்பு
கொரோனா 2வது அலை நாடு முழுவதும் தலைவிரித்து ஆடிக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது.

முழு ஊரடங்கு
இதனால் மால்கள், திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது. இருப்பினும் கொரோனாவின் வீரியம் குறைந்தபாடு இல்லை. இதையடுத்து தற்போது முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனிமையில் ஓய்வு
இதனிடையே பல்வேறு திரைபிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அசுரன் பட நடிகை அம்மு அபிராமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக கடந்த மே 2 தேதி பதிவிட்டு இருந்தார். மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் ஓய்வு எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

கொரோவிலிருந்து மீண்டார்
தற்போது, அம்மு அபிராமி தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் அன்பான விருப்பங்களுடனும், கடவுளின் கிருபையுடனும் கோவிட்19ல் இருந்து நான் முழுமையாக மீண்டு விட்டேன். பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளதை மகிழ்ச்சியோடு உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











