பல விதமான போட்டோசூட் மூலம் ... ஸ்டேடஸ் அப்டேட் செய்யும் பிரபலம் !

சென்னை : கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகி பட்டாசு பற்றவைத்த பிகில் படத்தில் தென்றல் என்ற வேடத்தில் நடித்து நம் மேல் தென்றலாக வீசிச்சென்ற அமிர்தா ஐயர், பிரபல சுவிஸ் அணிகல நிறுவனமான டேனியல் வெல்லிங்டன் விளம்பரத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் .

சமீபத்தில் அமிர்தா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் டேனியல் வெலிங்டனின் மேல்ரோஸ் வாட்சை அணிந்து போஸ் கொடுத்து தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். பல விதமான போசுகள் அடிக்கடி கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைப்பது அம்ரிதாவின் அல் டைம் ஃபாவொரைட் ஹாபி .
டேனியல் வெலிங்டன் நிறுவனத்திற்கு ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆபத்தே, யுஜ்வேந்தர் சஹால்ப் , இன்னும் பல பிரபலங்கள் போஸ் கொடுத்து அசத்தி உள்ளனர் . அது போன்ற பிரபலங்களின் வரிசையில் அம்ரிதா ஐயரும் அந்நிறுவத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இது அவர் புகழின் வீரியத்தை ஒரு படி மேலே செல்ல எடுக்கும் முயற்சி .

Actress Amritaaiyer Latest Insta post

குறும்படத்தால் பரவியப் புகழ்

கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்த இவர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அமிர்தா ஒரு மாடல் ஆனார். கமல் பிரகாஷ் இயக்கத்தில் கோமாளி படம் இயக்குநறான பிரதீப் ரங்கநாதன் உடன் இணைத்து ஹைவே காதலி எனும் ஓர் குறும்படத்தில் நடித்து, தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார் . இக்குறும்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, யூடியூபில் பல லட்சம் பார்வையாளர்களை குவித்து அமிர்தாவிற்கு ஓர் நல்ல ஆரம்பமாக அமைந்துள்ளது.

Actress Amritaaiyer Latest Insta post

தளபதியுடன் சேர்த்த அமிர்தா...

அமிர்தா சினிமாவில் தன்னுடைய தொடக்க காலங்களில் தெறி, லிங்கா, போக்கிரி ராஜா, தெனாலி ராமன் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். அதன் பின் படைவீரன் படத்தில் தன்னுடைய அடையாளத்தை இன்னும் ஆழமாக பதித்துள்ளார். இப்படத்திற்கு அமிர்தாவிற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான SIIMA விருதும் கிடைதுள்ளது. இதை தொடர்ந்து விஜய் ஆன்டனியுடன் காலி என்ற படத்தில் ஜோடி சேர்ந்தார் அட்லீயின் பிகிலில் தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடித்து தமிழக மக்களின் மனசில் தனக்கென்ற ஒரு ரசிகர் கூட்டத்தையே சேர்த்துள்ளார்.

Actress Amritaaiyer Latest Insta post

அங்கும் வீசுமா காற்று...

மலையாளம், தமிழ் படங்களை தொடர்ந்து , "30 ரொஜ்ஜுல்லோ ப்ரேமிச்சிண்டம் எலா" என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார், அப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியாகவுள்ள நிலையில் இருந்தது. கொரோனாவின் காரணமாக அப்படக்குழு அப்படத்தை வெளியீட்டை சற்று தள்ளி வைத்துள்ளது . அப்படத்தின் ஒரு பாடலான "நீலி நீலி ஆகாசம்" மட்டும் வெளியாகி, 20 கோடிகளுக்கு மேலான பார்வையாளர்களை குவித்து புதிய சாதனையை படைத்துள்ளது. ரெட் என்கிற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அப்படத்திருக்கான பின்னணி வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.இவ்வருடத்தின் முடிவில் அப்படம் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறார்கள் . பிறகு லிப்ட் என்கிற தமிழ் படத்தில் நடித்து வருகிறார் அமிர்தா. நிறைய படங்கள் தொடர்ந்து ரிலீஸ் ஆகாமல் இருந்தாலும் தனது சமூக வலைதள பக்கங்களில் நிறைய போட்டோஸ் அவ்வப்போது அப்டேட்ஸ் செய்து ரசிகர்களை குஷி படுத்திக்கிறார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X