மதராசப்பட்டினம் படத்தை லண்டனில் போட்டுக்காட்டிய எமி ஜாக்ஸன்.. 10 ஆண்டுகள் ஆனதன் கொண்டாட்டம்!

சென்னை: மதராசப்பட்டினம் படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதனை கொண்டாடும் வகையில் லண்டனில் போட்டுக்காட்டியிருக்கிறார் நடிகை எமி ஜாக்ஸன்.

Recommended Video

தாய்மையின் பூரிப்பில் எமி ஜாக்சன்... குழந்தையுடன் ஜாலி வாக் - குவியும் பாராட்டு

கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் மதராசப்பட்டினம். இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா லீடிங் ரோலில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தின் மூலம் லண்டன் மாடலான எமி ஜாக்ஸன் இந்திய சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார்.

மதராசப்பட்டினம்..

மதராசப்பட்டினம்..

கொள்ளை அழகில் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தைப்பிடித்து ஸ்ட்ராங்காக அமர்ந்து விட்டார். படத்தின் கதை 1900ஆம் ஆண்டுகளில் சென்னை மற்றும் சென்னையில் நடக்கும் கதைகளை காட்டும் வகையில் இருந்ததால் இப்படத்திற்கு ஒரு வெளிநாட்டு பெண் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டார்.

பாடல்கள் ஹிட்

பாடல்கள் ஹிட்

இந்தப் படத்தை இயக்குநர் ஏஎல் விஜய் இயக்கியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் பிளாக் பஸ்டர் ஹிட்டான நிலையில் பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் செம ஹிட்டானது. இந்நிலையில் இப்படம் வெளியானதன் பத்தாம் ஆண்டு தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்பட்டது.

குடும்பத்துடன் கொண்டாட்டம்

குடும்பத்துடன் கொண்டாட்டம்

இதனை முன்னிட்டு இயக்குநர் ஏஎல் விஜய் மற்றும் படத்தின் ஹீரோயின் ஆன எமி ஜாக்ஸன் ஆகியோர் மதராசப்பட்டினம் படம் குறித்த தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் நடிகை எமி ஜாக்ஸன், மதராசப்பட்டினம் படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆனதை தனது குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

ஸ்பெஷல் ஷோ

ஸ்பெஷல் ஷோ

இதற்காக வீட்டில் அப்படத்தை ஸ்பெஷல் ஷோவாக திரையிட்டு காட்டியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எமி. அதில் மதராசப்பட்டினம் படத்தின் 10 ஆண்டுகள்.. நம்பமுடியாத இந்தியாவை முதன்முறையாக பார்த்தது.

விஜய் அண்ணா..

விஜய் அண்ணா..

நேற்றிரவு கொண்டாடிய பிறகு, இன்று காலை நான் எழுந்தேன், இது போன்ற ஒரு அழகான ஸ்கிரிப்ட் படத்துடன் எனது பயணத்தைத் தொடங்குவதற்கும், நடிகர்கள் மற்றும் படக்குழுவை தற்போது வரை குடும்பம் என கூற முடிந்தது ஒரு பாக்கியம். விஜய் அண்ணா, லைஃப் டைம் வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

வாழ்த்து

வாழ்த்து

மேலும் வீட்டில் அட்டகாசமான உணவு, சரக்கு, இனிப்பு என ரசித்தவாறே படத்தை பார்த்த போட்டோக்களையும் நடிகை எமி ஜாக்ஸன் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X