Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புல்லுக்கட்டை சுமந்து நிற்கும் எமி.. பாத்துமா மாடு ஏதாவது மேஞ்சிடப்போகுது!
சென்னை : நடிகை எமி ஜாக்சன் புல்லுக்கட்டு போல் இருக்கும் உடையை அணிந்து போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஏ.எல் விஜய் இயக்கத்தில், ஆர்யாவுடன் மதராசப்பட்டினம் என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் எமி ஜாக்சன். சில தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு தாண்டவம், கெத்து, தெறி போன்ற பல படங்களில் நடித்திருந்தாலும் இயக்குனர் ஷங்கரின் 2.0 என்ற படத்தில் கடைசியாக நடித்து இருந்தார்.

கடைசி படம்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்த எமி ஜாக்சன், அதன் பிறகு தன் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். இங்கிலாந்து தொழில் அதிபர் ஜார்ஜ் பனாயோட்டவை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்ட எமி ஜாக்சன், குழந்தையுடன் கொஞ்சுவது, குழந்தைகளுக்காக நேரம் செலவழித்து அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார்.

கட்டுக்கோப்பான உடல்
குழந்தை பெற்ற பிறகும் கூட, தன் அழகு குறையாமல் பார்த்துக் கொள்ளும் நடிகை எமி ஜாக்சன், தன் உடலை எவ்வாறு கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதே அவர் செய்யும் ஒர்க்கவுட் மூலம் ரசிகர்களுக்கு புரிய வைத்தார். உடற்பயிற்சி செய்வதும் யோகா செய்வதும் தன் இளமையின் ரகசியம் என்று எமி ஜாக்சன் கூறி வருவது வழக்கம். அந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை அசரவைத்துள்ளது.

புல்லு கட்டு
எப்பொழுதும் செம ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வரும் எமி ஜாக்சன், சமீபத்தில் இவர் பதிவிட்ட போட்டோ ஒன்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. புல்லுக்கட்டில் செய்த கவுன் போல, அணிந்திருந்த உடை அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. எப்பொழுதும் வித்தியாசமான உடையணிந்து போட்டோவை பகிர்ந்து வரும் நடிகை எமி ஜாக்சன், இந்த முறையும் அதை தவறாமல் செய்துள்ளார். பார்ப்பதற்கு புல்லுகட்டு போல் இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பார்த்து ஏதாவது மாடு மேய்ந்து விடப்போகிறது என்று தங்களது நக்கலான கமெண்ட்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

வித்தியாசமே தெரியல
அதேபோல் சமீபத்தில் கடற்கரையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் மற்றும் மணலில் படுத்து கொண்டிருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டது. இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தனது உடையின் நிறத்தை தேர்வு செய்வார் எமி. கடற்கரை மணலில் இருப்பதே தெரியாத அளவிற்கு வித்யாசமான புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.