Amy Jackson: என்னது எமி ஜாக்சனா.. என்னங்க பண்ணி வச்சிருக்கீங்க!
சென்னை: மதராசபட்டினம் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளவர் நடிகை எமி ஜாக்சன்.
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் எமி ஜாக்சன்.
அடுத்ததாக அருண் விஜய்யுடன் இணைந்து மிஷன் அத்தியாயம் 1 என்ற படத்தில் நடித்துள்ளார்.

எமி ஜாக்சனின் புதிய ஹேர்ஸ்டைலால் ரசிகர்கள் அதிர்ச்சி: நடிகை எமி ஜாக்சன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன், தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானார். விஜய் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சுதந்திர காலகட்டத்திற்கு முந்தைய கதைக்களத்தில், காதலை மையமாக கொண்டு வெளியானது. படத்தில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். இவர்களுக்குள் இருந்த கெமிஸ்ட்ரி படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
படத்தின் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு கைகொடுத்தது. அந்தப் படத்தில் வெள்ளைக்கார பெண்ணாக, தமிழ் இளைஞனை காதலிக்கும் கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார் எமி ஜாக்சன். தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம், உதயநிதி, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து 2.O, தெறி, ஐ, தங்கமகன், கெத்து, தாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள எமி ஜாக்சன், தமிழ் நடிகையாகவே கொண்டாடப்பட்டார்.
தற்போது அருண் விஜய்யுடன் இணைந்து மிஷன் அத்தியாயம் 1 என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்துவந்த எமி ஜாக்சன் அவருடன் கடந்த 2019ம் ஆண்டில் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் இருந்த நிலையில் மனக்கசப்பு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்தனர். இதையடுத்து தற்போது ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் எமி ஜாக்சன், மாடலிங்கிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதனிடையே புதிய தோற்றத்துடன் மிலன் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் தன்னுடைய காதலர் எட் வெஸ்ட்விக்குடன் அவர் கலந்துக் கொண்டுள்ளார். இதில் எமி ஜாக்சனின் புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. எமியின் இந்த புதிய தோற்றம் ஒப்பன்ஹெய்மர் படத்தில் வரும் சிலியன் மர்ஃபியின் தோற்றத்தை ஒத்துள்ளதாக பலரும் விமர்சித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இத்தாலியின் மிலன் நகரில் மிலன் ஃபேஷன் வீக் நடைபெற்று வருகிறது. இதில் சர்வதேச அளவில் திரைப் பிரபலங்கள், மாடல்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டு மிலன் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில்தான் புதிய ஹேர்ஸ்டைலில் காணப்படுகிறார் எமி. மதராசப்பட்டிணம் படம் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள எமியின் இந்த லுக்கை சிலர் கிண்டலும் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











