எப்படிப்பட்ட டான்ஸரையும் மோசமாக காட்டிவிடுவார்..பிரபு தேவா குறித்து மனம் திறந்து தனுஷ் பட ஹீரோயின்!

சென்னை: பிரபுதேவா எப்படிப்பட்ட டான்ஸரையும் மோசமாக பார்க்க செய்து விடுவார் என நடிகை அமைரா தஸ்தூர் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான அமைரா தஸ்தூர், அனேகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

அதன் பிறகு தமிழில் பெரிதாக எந்த படத்திலும் தலைக்காட்டவில்லை அமைரா தஸ்தூர்.

6 ஆண்டுகளுக்கு பிறகு

6 ஆண்டுகளுக்கு பிறகு

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹீரா படத்தில் நடித்துள்ளார் அமைரா தஸ்தூர். 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

த்ரில்லர் கதை

த்ரில்லர் கதை

இதில் அமைரா தஸ்தூர் உட்பட 5 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அமைரா. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அமைரா, இதுபோன்ற த்ரில்லர் படத்தில் நடிக்க ஆர்வமாக இருந்ததாகவும், ஆதிக் ரவிச்சந்திரன் கதையை கேட்டவுடன் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மிகவும் நன்றாக இருந்தது

மிகவும் நன்றாக இருந்தது

மேலும் தனக்கு பிரபு தேவாவுடன் அதிகப்படியான காட்சிகள் இருந்ததாகவும், அவருடன் நடிக்க பயந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பாலிவுட்டில், அவர் ஒரு இயக்குனராகவும் நடன இயக்குனராகவும் பார்க்கப்படுகிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் நன்றாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

மோசமாக காட்டிவிடுவார்

மோசமாக காட்டிவிடுவார்

படத்தில் ஒரு கற்பனையான காட்சி உள்ளது, இது ஒரு சிறிய நடன பிட் கொண்டது, ஆனால் இது ஒரு முழுமையான நடன காட்சி அல்ல. அவருடன் நடனமாட நான் உண்மையில் பயந்தேன். அவர் நம்பமுடியாத நடனக் கலைஞர், அவர் எந்த நடனக் கலைஞரையும் திரையில் மோசமாக பார்க்க செய்து விடுவார் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X