உங்களுக்காகவும்… இந்தியாவுக்காகவும் தடுப்பூசி போடுங்கள்… தனுஷ் பட நடிகை அட்வைஸ் !

சென்னை : அனேகன் பட நடிகை அமைரா தஸ்தூர் மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவி வரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

தடுப்பூசி போடும் பணி மும்முரம்

தடுப்பூசி போடும் பணி மும்முரம்

இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்கின் , கோவிட் ஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரியிலிருந்து தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு தற்போது தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தி வருகிறது. இதன் மூலம் இந்ததாண்டு இறுதிக்குள் 120 கோடி மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்திவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தடுப்பூசி

தடுப்பூசி

அனேகன் பட நடிகை அமைரா தஸ்தூர் தனது முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஊசி போட்டாதும் நான் நன்றாகவே உணர்ந்தேன். அதிகாலையில் எனக்கு லேசான காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டது. ஒரு டோலோ மாத்திரையை சாப்பிட்டேன் தற்போது சரியாகி விட்டேன்.

நாட்டை காப்போம்

நாட்டை காப்போம்

தடுப்பூசி எடுத்துக்கொண்டதும் சிலருக்கு காய்ச்சல் வரும் சிலருக்கு வாராது அவ்வளவுதான். தடுப்பூசி குறித்து பயப்படத்தேவையில்லை எனவே தயவுசெய்து தடுப்பூசி போடுங்கள், உங்களுக்காக இல்லையென்றாலும் உங்கள் குடும்பத்துக்காகவும் இந்தியாவுக்காகவும் தடுப்பூசி போடுங்கள். நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வோம் என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

தடுப்பூசி போட்டார்

தடுப்பூசி போட்டார்

அதேபோல தமிழ் திரையுலகில் நடன இயக்குனரும் மற்றும் நடிகையுமான காயத்ரி ரகுராம் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்

More from Filmibeat

Read more about: amyra dastur
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X