அம்மாடியோ .. தலைகீழ் யோகா… வாய் பிளந்த ரசிகர்கள் !

சென்னை : நடிகை ஆனந்தி அஜய் வித்தியாசமான யோகாக்களை செய்து அதை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சீரியல் தொடர்களிலும் மற்றும் சினிமாக்களிலும் நடித்து இல்லத்தரசிகளுக்கு தெரிந்த முகமானவர் நடிகை ஆனந்தி அஜய்.

தாரை தப்பட்டை படத்தில் துணை கதாநாயகிகளில் ஒருவராக வந்து நடனத்தில் பட்டையைக் கிளப்பிய ஆனந்தி தற்பொழுது யோகா செய்து அசத்தி வருகிறார்.

மறக்க முடியாத

மறக்க முடியாத

தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் பல பிரபலமான நடன போட்டிகளிலும் கலந்து கொண்டு யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒரு நடிகை ஆனந்தி அஜய். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கும் சீரியல் மூலம் மிகப் பிரபலமான இவர் தற்பொழுது தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

திறமையான நடனத்தை

திறமையான நடனத்தை

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பல வருடங்கள் பணியாற்றி வந்த ஆனந்தி, விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 சீசன் 6இல் கலந்துகொண்டு தனது திறமையான நடனத்தை வெளிப்படுத்தி அதில் வெற்றியாளராகவும் வந்தார்.

கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்

கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம்

தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் தோன்றியதன் மூலம் பிரபலமாக வலம் வந்த ஆனந்தி தமிழில் பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான தொடரான கார்த்திகைப் பெண்கள் நெடுந்தொடரின் மூலம் சீரியலில் நடிக்கத் தொடங்கிய இவர் அதைத் தொடர்ந்து கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் மற்றும் கனா காணும் காலங்கள் போன்ற பிரபலமான சீரியல்களிலும் நடித்துள்ளார்.

சிறிய கதாபாத்திரத்தில்

சிறிய கதாபாத்திரத்தில்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என ரவுண்டு கட்டி பிஸியாக நடித்து வந்த ஆனந்தி தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பட புகழ் இயக்குனர் கோகுலின் முதல் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த ரௌத்திரம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கிய இவர் அதைத் தொடர்ந்து டமால் டுமீல், மீகாமன் மற்றும் தாரை தப்பட்டை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனந்தியின் நடனம்

ஆனந்தியின் நடனம்

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை இவருக்கு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று கொடுத்த நிலையில், இந்தப்படத்தில் இவர் நடிகை வரலட்சுமியுடன் இணைந்து நடன குழு கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்து நடனத்தில் தூள் கிளப்பி இருப்பார். இந்த படத்தில் வரலட்சுமியின் நடனத்திற்கு இணையாக ஆனந்தியின் நடனம் மிகப் பிரபலமாக பேசப்பட்டது.

அனைவரையும் கவர்ந்துள்ளது

அனைவரையும் கவர்ந்துள்ளது

தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் தனது அதிரடியை காட்டிவரும் ஆனந்தி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்து அசத்தி வரும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டு வருகிறார். சமீபத்தில் இவர் பதிவிட்ட ஒரு வித்தியாசமான யோகா பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது.

Recommended Video

சுவரில் சாய்ந்து.. வித்தியாசமான யோகாசனம்.. ஐஷ்வர்யா மேனனின் வைரல் வீடியோ!
தலைகீழாக நின்றபடி

தலைகீழாக நின்றபடி

வீட்டு வாசலில் தலைகீழாக நின்றபடி தனது இரு கால்களையும் மேலே அகலமாக நீட்டியவாறு இவர் யோகா செய்யும் அந்த புகைப்படம் தற்பொழுது அனைவரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. இதைப்பார்த்த இணையவாசிகள் இப்படி கூட யோகா பண்ணலாமா என்று ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X