பிக் பாஸ் 3க்கு நோ சொன்ன பிரபல நடிகை.. காரணம் ஒன்றரை வயது மகன்!
நடிகை ஆனந்தி பிக் பாஸ் 3ல் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை மகனுக்காக மறுத்து விட்டாராம்.
Recommended Video
சென்னை: மகனை விட்டு விட்டு 100 நாட்கள் இருக்க முடியாது என்பதற்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை மறுத்து விட்டாராம் நடிகை ஆனந்தி.
பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஏறக்குறைய கத்தி போன்றது தான். அதனை மருத்துவரைப் போல் பயன்படுத்துகிறோமோ இல்லை ரௌடியைப் போல் பயன்படுத்துகிறோமோ என்பதில் தான் நமது வெற்றி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேரைக் கெடுத்துக் கொண்டவர்களைப் போலவே, அதன் மூலம் நல்ல பெயர் பெற்றவர்களும் உண்டு. அதோடு, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அதில் கிடைக்கும் விளம்பரம் மூலம் பட வாய்ப்புகளும் கன்பார்ம்.

ரித்விகா:
இதனாலேயே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலர் போட்டியிடுகின்றனர். கமலும் கூட ‘வெள்ளித்திரையை விட சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்வது 10 படங்களுக்குச் சமம்' என போன சீசனில் தெரிவித்திருந்தார். இதே போன்ற காரணத்தை வெளிப்படையாகக் கூறி, பிக் பாஸ் சீசன் 2 டைட்டிலை வென்றவர் தான் ரித்விகா.

நடிகை ஆனந்தி:
இப்படியாக பிக் பாஸ் வீட்டை தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள பலர் தயாராக இருக்கையில், சின்னத்திரை நடிகை ஆனந்தி, பிக் பாஸ் சீசன் 3யில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை வேண்டாமென்று சொல்லி விட்டாராம்.

ஒன்றரை வயது மகன்:
காரணம் ஆனந்திக்கு தற்போது ஒன்றரை வயதில் மகன் இருக்கிறார். படப்பிடிப்புகளுக்குக் கூட அனுமதி பெற்று அவரை உடன் அழைத்துச் செல்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி மகனை விட்டு விட்டு பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருக்க முடியும் என்பதாலேயே கிடைத்த வாய்ப்பை மறுத்து விட்டாராம் ஆனந்தி.

நிலன்:
கடந்த சீசனில் 70 நாட்களுக்குபின் பிக் பாஸ் வீட்டில் நுழைந்தவர் நடிகை விஜயலட்சுமி. அவர் தனது ஒரு வயது மகன் நிலனை வீட்டில் விட்டு விட்டுத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











