இது நான்கு வருட காதல்.. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன்.. நடிகை ஆனந்தி தகவல்!

By

சென்னை: நாங்கள் நான்கு வருடமாகக் காதலித்து திருமணம் செய்துகொண்டோம் என்று இணை இயக்குனரைத் திருமணம் செய்துகொண்ட நடிகை ஆனந்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Kayal Anandhi Wedding Bells | Agni siragugal Co Director Socrates Weds Anandhi -Filmibeat Tamil

தமிழில், கயல் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஆனந்தி. தெலுங்கானாவை சேர்ந்தவர் இவர்.

தெலுங்கில் வெளியான, ஈ ராஜூலு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பிரபு சாலமனின் கயல்

பிரபு சாலமனின் கயல்

ரக்‌ஷிதா என்ற பெயரில் அங்கு நடித்து வந்த அவர், தமிழுக்கு ஆனந்தி என பெயர் மாறினார். தமிழில், 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற படம் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்தார். இதில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது.

கடைசி குண்டு

கடைசி குண்டு

இதனால் 'கயல்' ஆனந்தி ஆனார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின. பின்னர், த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் உட்பட சில படங்களில் நடித்து வந்தார். கடைசியாக, இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தில் நடித்திருந்தார்.

தெலங்கானா மாநிலம்

தெலங்கானா மாநிலம்

இப்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், மூடர் கூடம் நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், தெலுங்கில், ஸோம்பி ரெட்டி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். நடிகை ஆனந்திக்கு தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் கடந்த 7 ஆம் தேதி சாக்ரடீஸ் என்பவருடன் திருமணம் நடந்தது.

இணை இயக்குனர்

இணை இயக்குனர்

மணமகன் சாக்ரட்டீஸ், இணை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். இவர் இயக்குனர் மூடர் கூடம் நவீனின் மைத்துனர். நவீன் மனைவியின் தம்பி. நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் இணை இயக்குனராக, சாக்ரடீஸ் பணியாற்றியுள்ளார். இப்போது அக்னிச் சிறக்குகள் படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

நான்கு வருட காதல்

நான்கு வருட காதல்

திருமணம் செய்துகொண்டது பற்றி நடிகை ஆனந்தி கூறும்போது, நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தோம். அதன்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.

தொடர்ந்து நடிப்பேன்

தொடர்ந்து நடிப்பேன்

திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவர் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இப்போது நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு, புதிய படங்களை நடிக்க ஒப்புக் கொள்வேன் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X