சினிமாவில் யாருக்குமே சொல்லலையாமே.. பிரபல நடிகை ரகசிய திருமணம்.. இன்று நடக்கிறது!

By

சென்னை: பிரபல நடிகை, இன்று இரவு ரகசிய திருமணம் செய்துகொள்ள இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானாவை சேர்ந்தவர், நடிகை ஆனந்தி. இவர் தெலுங்கில் வெளியான, ஈ ராஜூலு என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ரக்‌ஷிதா என்ற பெயரில் அங்கு நடித்து வந்த அவர், தமிழுக்கு ஆனந்தி என மாறினார்.

'கயல்' ஆனந்தி

'கயல்' ஆனந்தி

தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்தார். இதில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. இதையடுத்து 'கயல்' ஆனந்தி ஆனார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின.தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் நடித்தார். இதில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. இதையடுத்து 'கயல்' ஆனந்தி ஆனார். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின.

பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள்

பின்னர், த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் உட்பட சில படங்களில் நடித்து வந்தார். கடைசியாக இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்கினார்.

அற்புத கேமரா

அற்புத கேமரா

அட்டகத்தி தினேஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படமும் வரவேற்ப்பை பெற்றிருந்தது. இப்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், மூடர் கூடம் நவீன் இயக்கியுள்ள அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், தெலுங்கில், ஸோம்பி ரெட்டி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட ஆனந்திக்கு இன்று இரவு ரகசிய திருமணம் நடக்க இருக்கிறது. தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் ஆனந்திக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. இது காதல் திருமணம் அல்ல
என்றும் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் என்றும் கூறப்படுகிறது .

கன்வென்சன் சென்டர்

கன்வென்சன் சென்டர்

இவர்கள் திருமணம், வாராங்கல்லில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. அங்கு ஹன்டர் ரோட்டில் உள்ள கோடெம் கன்வென்சன் சென்டரில் இந்த திருமணம் நடக்கிறது. இந்த திருமணத்துக்கு, சினிமா துறையினர் யாரும் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X