கேரக்டரை தப்பாக பேசிய நபர்.. செருப்பால் அடிப்பேன் என பதிலடி கொடுத்த புஷ்பா பட நடிகை

சென்னை: தன்னுடைய கேரக்டரை பற்றி தவறாக பேசிய ஒருவருக்கு புஷ்பா படத்தில் நடித்த அனசுயா பரத்வாஜ் கொடுத்திருக்கும் பதிலடி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க மித்ரி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா படம் செய்த சாதனை

புஷ்பா படம் செய்த சாதனை

புஷ்பா படம் ஒருதரப்பினரை திருப்திப்படுத்தவில்லை என்பதே நிதர்சனம் இருப்பினும் படம் வசூல் வேட்டை நிகழ்த்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் வித்தியாசமாக நடித்திருக்கிறார் எனவும் இதுவரை அவரை இப்படி திரையில் பார்த்ததில்லை எனவும் ரசிகர்கள் கொண்டாடினர். இதனால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

புஷ்பாவில் நடித்த அனசுயா பரத்வாஜ்

புஷ்பாவில் நடித்த அனசுயா பரத்வாஜ்

புஷ்பா படத்தில் அனசுயா பரத்வாஜும் நடித்திருந்தார். 2003ஆம் ஆண்டு திரையுலகுக்கு அறிமுகமான அனசுயா தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் புஷ்பா 2 படத்திலும் நடிக்கவிருக்கிறார். இவர் பரத்வாஜ் என்பவரை திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.

அனசுயாவின் இன்ஸ்டா போஸ்ட்

அனசுயாவின் இன்ஸ்டா போஸ்ட்

அனசுயா பரத்வாஜ் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் அனசுயா பரத்வாஜ். அப்போது நெட்டிசன் ஒருவர், "அனசுயா பரத்வாஜை பணத்துக்காக மட்டும்தான் திருமணம் செய்துகொண்டார்" என கமெண்ட் செய்திருந்தார்.

செருப்பால் அடிப்பேன்.. கொந்தளித்த அனசுயா பரத்வாஜ்

செருப்பால் அடிப்பேன்.. கொந்தளித்த அனசுயா பரத்வாஜ்

அந்த கமெண்ட்டை பார்த்து கோபமடைந்த அனசுயா, "பணத்தை தவிர நீ முதலில் சிந்திக்க கற்றுக்கொள். ஏன் என் கணவரிடம் மட்டும்தான் பணம் இருக்கிறதா? என்னிடம் இல்லையா?. இனி பேசினால் உன்னை செருப்பால் அடிப்பேன்.

உன்னுடைய எண்ணம் பணத்தில் மட்டும்தான் இருக்கிறது. உன்னைப் போன்று அனைவரும் இருக்கமாட்டார்கள். முதலில் உன்னுடைய குணத்தை மாற்றிக்கொள்" என காட்டமாக பதிலளித்திருக்கிறார். அவரது இந்த ரிப்ளை கமெண்ட் இணையத்தில் ட்ரெண்டாகிவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X