ஷார்ட்ஸ் போட்டது ஒரு குத்தமாய்யா? வயதை சொல்லி விளாசிய நெட்டிசன்ஸ்.. நச் பதிலடி கொடுத்த டீனேஜ் நடிகை!
திருவனந்தபுரம்: ஷார்ட்ஸில் போஸ் கொடுத்ததற்காக திட்டி தீர்த்த நெட்டிசன்களுக்கு பிரபல இளம் நடிகை நச் பதிலடி கொடுத்துள்ளார்.
மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை அனஸ்வரா ராஜன். கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான உதஹரணம் சுஜாதா என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான தண்ணீர் மத்தன் தினங்கள் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

ராங்கி படம்
தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் நடிகை அனஸ்வரா, தமிழில் எம் சரவணன் இயக்கத்தில் திரிஷா லீடிங் ரோலில் நடிக்கும் ராங்கி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அடியெடுத்து வைக்கிறார் அனஸ்வரா.

ட்ரெடிஷ்னல் லுக்
18 வயதே ஆன நடிகை அனஸ்வரா சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ளார். 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களையும் கொண்டுள்ளார் அனஸ்வரா. அவ்வப்போது தனது ட்ரெடிஷ்னல் லுக் போட்டோக்களையே ஷேர் செய்து வருகிறார்.

தெரியும்படி
இந்நிலையில் ஆஷ் நிற ஷார்ட்ஸ், பிங்க் நிற டாப்ஸ் என மாடர்ன் லுக்கில் ஒரு போட்டோவை ஷேர் செய்தார் அனஸ்வரா ராஜன். அந்த உடையில் அவரது தொடை வரை தெரியும்படியான போட்டோவை பகிர்ந்திருந்தார். அதனை பார்த்து பொங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

நடிகை நச் பதிலடி
அவருடைய வயதை குறிப்பிட்டு இந்த வயதில் இப்படியா உடை உடுத்துவது என கேட்டு கடுமையாக விளாசினர். பலரும் இப்படி ஒரு உடையை உடுத்துகிறீர்களே உங்களுக்கு வெட்கமே இல்லையா என்றும் திட்டி தீர்த்தனர். இந்நிலையில் அவர்களே எதிர்பார்க்காதவாறு நச் பதிலடி கொடுத்துள்ளார் அனஸ்வரா ராஜன்.

கவலைப்பட வேண்டாம்
அதாவது அதே உடையில் தன்னுடைய முழுக்கால்களும் தெரியும்படியான போட்டோவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த போட்டோவுக்கு நான் என்ன செய்கிறேன் என்று கவலைப்பட வேண்டாம். நான் என்ன செய்கிறேன் என்று நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று கவலைப்படுங்கள்.. என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

லெக் டே போட்டோஸ்
நடிகை அனஸ்வராவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் திட்டியவர்களுக்கு நச் பதிலடி கொடுத்துள்ளீர்கள். உங்களை எது சந்தோஷப்படுத்துகிறதோ அதை செய்யுங்கள் என கூறியுள்ளனர். மேலும் நடிகைகள் ரிமா, பார்வதி, அபூர்வா போஸ், நஸ்ரியா, அஹானா உள்ளிட்ட பலரும் லெக்டே என்ற ஹேஷ்டேக்குடன் தங்கள் முழு காலும் தெரியும் படியான போட்டோவை பதிவிட்டு அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











