அச்சச்சோ.. என்னாச்சு.. காலில் கட்டு.. வாக்கர் வைத்து நடக்கும் பிரபல தொகுப்பாளினி.. பதறும் ரசிகர்கள்!
சென்னை: பிரபல டிவி தொகுப்பாளியான டிடி, காலில் பெரிய கட்டுடன் வெளியிட்டிருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் பதறி வருகின்றனர்.
Recommended Video
தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் திவ்யதர்ஷ்னி. டிடி என்றழைக்கப்படும் இவர் சில படங்களிலும் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
பல விருது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வரும் டிடி, விஜய் டிவியின் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார். இவரது கலகலப்பான பேச்சுக்கு திரை பிரபலங்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

பிகினி போட்டோ
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் டிடி. அவரது திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்தது குறித்து பல்வேறு பேச்சுகள் இன்னமும் பரவிய வண்ணம் உள்ளன. அதோடு தனது தம்பியுடன் பிகினி உடையில் அவர் எடுத்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்னதான் தம்பி என்றாலும் இப்படியா என விளாசினர்.

பிரபல நடிகருடன்
அதனை தொடர்ந்த இரவு பார்ட்டியில் அவர் பங்கேற்ற போட்டோக்களும் கசிந்து சர்ச்சையானது. ஏற்கனவே சுச்சி லீக்ஸ் மூலம் அவர் பிரபல நடிகருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

டிடியின் போட்டோ
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் டிடி. அவரது திருமண பந்தம் விவாகரத்தில் முடிந்தது குறித்து பல்வேறு பேச்சுகள் இன்னமும் பரவிய வண்ணம் உள்ளன. அதோடு தனது தம்பியுடன் பிகினி உடையில் அவர் எடுத்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்னதான் தம்பி என்றாலும் இப்படியா என விளாசினர்.

காலில் ஃபிராக்சர்
அதில் காலில் பெரிய கட்டுப் போடப்பட்டுள்ளது. வாக்கருடன் நடை பயிற்சியை மேற்கொண்டுள்ளார் டிடி. மேலும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட பிறகு என்னுடைய இடது காலில் ஃபிராக்சர் ஏற்பட்டு விட்டது. இதனால் பெரும் மன வேதனையில் இருந்தேன்.அதில் இருந்து மனதை திருப்புவதற்காக எழுத தொடங்கினேன்.

இப்போது புரியும்
OTTயை பார்த்தேன் அதில் மனதுக்கு சரி என பட்டதை குறித்த சம்பந்தப்பட்டவர்களை பாராட்டினேன். இப்போது இதனை போஸ்ட் செய்யும் அளவுக்கு பலத்தைப் பெற்றேன். லைவ் சேட்டுக்கு ஏன் மறுப்பு தெரிவித்தேன் என இப்போது புரியும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

பிரபலங்கள் நலம் விசாரிப்பு
இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சு என பதறிப்போயுள்ளனர். பலரும் கவனமாக இருங்கள், விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளனர். நடிகைகள் வாணி போஜன், அதுல்யா ரவி, நிவேதா பெத்துராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் டிடியை நலம் விசாரித்ததோடு விரைவில் குணமடைய வேண்டும் என வாழ்த்தியுள்ளனர்.

மீண்டும் காலில்
துல்கர் சல்மான் பதிவிட்டுள்ள குறிப்பில் மீண்டும் காலா என கேட்டுள்ளார். மேலும் காலில் அடிபடுவது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பும் நடிகை டிடி காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறி ஒரு போட்டோவை ஷேர் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











