மணி கணக்குல நிக்க முடியாது ‘சேர்‘ கொடுங்க ப்ளீஸ்.. டிடியின் உருக்கமான பதிவு!

சென்னை : தொகுப்பாளினி டிடியை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவர். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலும் சரி.. சினிமா பிரபலங்களை பேட்டி காண்பதிலும் திறமையானவர்.

எத்தனை தொகுப்பாளர்கள் புதுசு புதுசாக வந்தாலும் மக்கள் மனதில் இவருக்கு என்று தனி இடம் உண்டு.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார்.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினி டிடி தான். தன்னுடைய திறனாலும் சுட்டித்தனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்துவிடுவார். காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த இவர், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

வெள்ளித்திரையிலும்

வெள்ளித்திரையிலும்

20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி, வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை அடுத்து அவரால் நீண்ட நேரம் நிற்கமுடியாததால் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் டிடி நடந்து வருகிறார். ஒரு சில தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

வாத்தி இசைவெளியீட்டு விழா

வாத்தி இசைவெளியீட்டு விழா

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில், டிடி நிற்காமல் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, இத்தனை நாளா என்னை சப்போர்ட் பண்ண அனைவருக்கும் நன்றி.

டிடி வேண்டுகோள்

டிடி வேண்டுகோள்

நான், நிகழ்ச்சி போய்க் கொண்டு இருக்கும் போது, எதையாவது எழுதிக்கொண்டே இருப்பேன், அதே போல மூளைக்குள் எதாவது யோசனை ஓடிக்கொண்டே இருக்கும். இந்த போட்டோவை இப்போது நான் பகிர காரணம், பல மணி நேரமாக நின்று கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என்பது சாதாரணமான விஷயம் இல்லை. இதனால், நிகழ்ச்சியை நடத்துவர்களுக்கு நான் அன்பான கோரிக்கை ஒன்றை வைக்கிறேன்.

தனி இருக்கை கொடுங்கள்

தனி இருக்கை கொடுங்கள்

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கு என்று தனி இருக்கை கொடுங்க, பார்வையாளர்கள் பார்க்கும் போது நாங்கள் நின்று கொண்டு இருப்பது போலத்தான் தெரியும். பல மணி நேரம் நின்று கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் எங்களுக்கும் இது உதவியாக இருக்கும் என டிடி தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X