விபத்தில் பறிபோன கால்.. வீட்டை விட்டு வெளியேறி திருமணம்.. சுதா சந்திரனின் கண்ணீர் கதை!
சென்னை: வாழ்க்கைக்கு தன்னம்பிக்கை என்பது முக்கியமான ஒன்று அதுவும் சினிமா இண்டஸ்ட்ரியில் தன்னம்பிக்கை அதிகமாகவே இருக்க வேண்டும். அப்படி தன்னம்பிக்கைக்கு பெயர் எடுத்த நடிகைதான் சுதா சந்திரன். விபத்து ஒன்றில் சிக்கி கால்களை இழந்த நடிகை சுதா சந்திரன் தற்போது வரை செயற்கை காலுடன் பரதநாட்டியத்தில் கலக்கிக் கொண்டு இருக்கிறார். இந்த செய்தியில் அவரின் கண்ணீர் கதையை பார்க்கலாம்.
நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான சுதா சந்திரன் செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி 1965 ஆம் ஆண்டு சந்திரன், தங்கம் தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். அம்மா பாடகியாக இருந்தாலும், அவருக்கு பரதநாட்டியத்தின் மீது ஈடுபாடு இருந்ததால், தன்னுடைய மகளை ஒரு பரதநாட்டிய கலைஞராக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதற்கு ஏற்ற போலயே சுதா சந்திரனும் மூன்று வயதிலேயே நடனத்தின் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார். இதனால், 5 வயதிலேயே மும்பையில் புகழ் பெற்ற kalasadan டான்ஸ் அகாடமியில் சேர்க்கப்பட்ட சுதா சந்திரன், சிறப்பாக நடனமாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

நடிகை சுதா சந்திரன்: இதைத் தொடர்ந்து பல மேடைகளில் ஆடி நடனத்தில் புகழ் பெற்ற வந்த சுதா சந்திரன் தனது 15 வயதில் விபத்தில் சிக்கினார். திருச்சியில் உள்ள சமயபுரம் கோவிலுக்கு குடும்பத்தோடு சாமி தரிசனத்திற்காக சென்றபோது இவர்கள் சென்ற விபத்துக்குள்ளானது. இதில், சுதா சந்திரனின் கால் நொறுங்கிவிட்டதால், அவரின் கால்கள் அறுவை சிகிச்சை மூலம் வெட்டி எடுக்கப்பட்டது.விபத்திற்கு பிறகு வாழ்க்கையே முடிந்தது, இனி மேல் நடனமாட முடியாது என்று ஏங்கி இருந்த சுதா சந்திரன், செயற்கையாக கால் பொருத்தப்பட்டு மீண்டும், தனது தன் நம்பிக்கையால் அனைத்து மேடையிலும் நடனமாடி அசத்தினார்.
மயூரி படத்தில்: இதையடுத்து தான், தெலுங்கில் இவரது வாழ்க்கை வரலாற்று திரைப்படமான எடுக்கப்பட்டது. 'மயூரி' என்ற பெயரிர் எடுக்கப்பட்ட படத்தில் சுதா சந்திரனே கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. அதைத் தொடர்ந்து நடிகையாக மாறிய சுதா சந்திரன், வசந்த ராகம், சின்ன தம்பி பெரிய தம்பி, சின்ன பூவே மெல்ல பேசு என தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அடுத்தடுத்த படத்தில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்த சுதா சந்திரன்.
காதல் திருமணம்: இவர் சினிமாவில் பிஸியாக இருந்த போது, உதவி இயக்குநரான ரவி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி உள்ளது. ரவி பஞ்சாபி என்பதால், இவர்களின் காதலை பெற்றோர் ஏற்கவில்லை. எவ்வளவோ சமாதானம் செய்தும் அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து வேறு வழியே இல்லாமல் சுதா சந்திரன் வீட்டை விட்டு வெளியேறி மும்பை சேம்பூர் பகுதியில் உள்ள கோவிலில் யாருக்கும் தெரியாமல் 1994 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சதா சந்திரன் சினிமவை விட சீரிகளில் பட்டையை கிளப்பி வருகிறார். தமிழில் டப் செய்து ஒளிபரப்பான நாகினி 1, 2 வில் அட்டகாசமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல விஜய் டிவியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு என்ற சீரியலில் மாமியாராக நடித்திருந்தார். இவர் கடைசியாக தமிழில் தனுஷ் தமன்னா நடித்த வேங்கை திரைப்படத்தில் நடித்திருந்தார். விபத்தால் கால்களை இழந்த போதும், அதை துச்சம் என உதறி தள்ளி விட்டது தனது தன்னம்பிக்கையால் தற்போது வரை அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக சுதா சந்திரன் வாழ்ந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











