kollangudi karuppayee: தனிமையில் வாடிய கொல்லங்குடி கருப்பாயி திடீர் மரணம்.. சோகத்தில் திரைத்துறை!
சென்னை: பழம்பெரும் நடிகையான கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். அவருக்கு வயது 99.
நாட்டுப்புற பாடகியான ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை பாடி உள்ள கருப்பாயி, வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் உடல் சிவகங்கையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
1985 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ஆண்பாவம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் கொல்லங்குடி கருப்பாயி. இவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே, மண்வளம் கமழும் நாட்டுப்புற பாடல்கள் பாடி பிரபலமானவராக இருந்தார். சினிமாவிலும் பல நாட்டுப்புற பாடல்களை பாடி இருக்கிறார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண் இசை பாடல்களை கொல்லங்குடி கருப்பாயி பாடி இருக்கிறார்.

கொல்லக்குடி கருப்பாயி: சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி கிராமத்தில் வசித்து வந்த பாடகி கருப்பாயி. நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் அளித்து வரும் மாதாந்த தொகையை வைத்தே குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். சினிமாவில் நடிப்பதற்கும், பாடுவதற்கும் வாய்ப்பு குறைந்ததால், திருவிழாக்களில் நாட்டுப்புற பாடல்களை பாடி வந்துள்ளார். வயதானதால் அதிலும் பாட முடியாமல் போக தினமும் வாழ்க்கையை கஷ்டத்துடன், வறுமையின் பிடியில் தவித்து இருந்திருக்கிறார் கொல்லங்குடி கருப்பாயி.
காலமானார்: ஆண்பாவம் படத்தில், விகே ராமசாமிக்கு அம்மாவாகவும் பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்திருந்தார். அவர் நடித்த அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோபாலா கோபாலா, ஆயிசு நூறு, கபடி கபடி, ஆண்களை நம்பாதே, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.1993ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கரங்களால் கலைமாமணி விருது பெற்ற கொல்லங்குடி கருப்பாயி, உறவினர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருப்பாயினின் கணவர் விபத்து ஒன்றில் இறந்துவிட, குழந்தையை வளர்ந்து வந்த நிலையில் குழந்தையும் இறந்துவிட, தனிமையில் வாடி வந்த கொல்லங்குடி கருப்பாயி, வயது மூப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் திரைத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பலரும் இணையத்தின் வழியாக இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











