காருக்குள் வைத்து அடி உதை.. கர்ப்பிணினு கூட பாக்கல.. கதறிய நடிகை!
சென்னை: கருங்காலி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அஸ்மிதா நீலமேகம். மாடலிங் துறையில் மிகவும் பிரபலமான ஒரு மாடலாக இருந்து இன்று தென்னிந்தியாவின் முன்னணி வெட்டிங் பிரைடல் ஆர்டிஸ்டாக வளர்ந்துள்ளார். இவர், கணவர் விஷ்ணு தன்னை தினமும் அடித்து உதைத்து துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிரபலமான நடிகையாக வர வேண்டும் என்ற கனவோடு இருந்த அஸ்மிதா, கருங்காலி படத்தில் நடித்தற்கு பிறகு, ஒப்பனை கலைஞராக மறு உருவாக்கம் செய்து கொண்டு அழகு கலை நிபுணரானார். asmitha make over artistry என்ற பெயரில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். சென்னை விருகம்பாக்கம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் வசித்து வரும் இவர். இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான விர்சுவல் வாரியர் விஷ்ணுவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த மாதம் இவருக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை பிறந்துள்ளது.
நடிகை அஸ்மிதா: இந்நிலையில் நடிகை அஸ்மிதா, தனது கணவர் விஷ்ணு மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார். அதில், கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி தான் என்னுடைய கணவர் விஷ்ணுவுடன் கிண்டிக்கு காரில் சென்று கொண்டு இருந்த போது, அவர் என்னை கடுமையாக தாக்கினார். காரில் ஏறியது முதலே, எனக்கும் அவருக்கும் சிறிய வாக்குவாதம் நடந்த கொண்டே இருந்தது. கார் கிண்டிக்கு வந்து கொண்டிருந்த போது, விஷ்ணு என்னை கடுமையாக தாக்கினார். அவர் அடித்ததில், எனது தாடை கிழிந்து பற்கள் உடைந்து விட்டன. தன்னை ஒரு கர்ப்பிணி என்று கூட பார்க்காமல், என் குழந்தையை கொல்லும் நோக்கத்திலேயே காருக்குள்ளே அவர் என்னை கடுமையாக தாக்கினார்.

பல பெண்களுடன் தொடர்பு: தான் ஒன்பது மாத கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி, கணவர் விஷ்ணு நண்பர்களுடன் குடித்துவிட்டு, நண்பரின் சகோதரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதை தெரிந்து கொண்ட நண்பர்கள், அவரை கடுமையாக தாக்கிய வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகின. இது குறித்து, எனக்கு தகவல் வந்ததும் நான் அந்த இடத்திற்கு சென்று அவரின் கைபேசியை வாங்கி பார்த்தேன், அதில், அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது, அந்தப் பெண்களுடன் அவர் தவறான உறவில் இருந்ததை வீடியோவாக எடுத்து பதிவு செய்து வைத்திருக்கிறார். இதை பார்த்து நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.
ஏமாற்றிவிட்டார்: இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் கணவர் மற்றும் மாமியாரை கடன் மோசடி வழக்கில், கர்நாடகா போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அந்த நேரத்தில் எனக்கு விஷ்ணு ஃபோன் செய்து, 37 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் என்னை வெளியே விடுவதாக போலீசார் கூறியதாக என்னிடம் மனம் உடைந்து பேசினார். இதைத்தொடர்ந்து, நான் என் அம்மாவின் வங்கியிலும், என்னுடைய வங்கியில் அவசரமாக கடன் பெற்று விஷ்ணுவுக்கு பணத்தை அனுப்பி வைத்தேன். அதன் மூலமாக அவர் வெளியே வந்தார். நான் செய்த நன்றியை மறந்துவிட்டு என்னுடைய கணவர் விஷ்ணு, சமூக வலைதளத்தில் என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் ஆதாரமே இல்லாமல் அவதூறாக பேசி வருகிறார்.
7 பிரிவுகளில் வழக்கு: கடந்த மாதம் 8ந் தேதி எனக்கு மூன்றாவதாக ஒரு குழந்தை பிறந்த போது, தினமும் என்னை அடித்து துன்புறுத்துகிறார் என்று நடிகை அஸ்மிதா கணவர் விஷ்ணு மற்றும் அவரது தாய் ஆனந்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி கொடுத்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விஷ்ணு மீது, பெண் வன்கொடுமை, மோசடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி மற்றும் சமூக வலைதளத்தில் பொய்யான தகவல்களை பரப்புதல் என ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விஷ்ணு குமாரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











