பட வாய்ப்புக்காக 24 லட்சம் கொடுத்தேன்.. பணத்தை ஏமாற்றிய தயாரிப்பாளர்.. செருப்பால் அடித்த நடிகை!

சென்னை: மும்பையைச் சேர்ந்த மாடல் அழகி ருச்சி குஜ்ஜர், சோ லாங் வேலி என்ற திரைப்படத்தின் ப்ரீமியம் ஷோவில் தயாரிப்பாளர் கரணை செருப்பால் அடித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, தயாரிப்பாளர் கரண் சிங் 23 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிவிட்டதாக மும்பை காவல்துறையிடம் ருச்சி குஜ்ஜார் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

மாடல் அழகி ருச்சி குஜ்ஜர் தனது புகாரில், தொலைக்காட்சி சேனலுக்காக ஒரு திரைப்படத்தைத் தொடங்குவதாகவும், லாபத்தில் பங்கு தருவதாகவும், திரையில் வாய்ப்பு கொடுப்பதாகவும் கரண் சிங் என்னிடம் கூறி பணம் பெற்றார். அந்த பணத்தை தனது நிறுவனமான எஸ்.ஆர் ஈவென்ட் அண்ட் என்டர்டெயின்மென்ட் மூலம் சுமார் 24 லட்சம் ரூபாய் கரண் சிங்கின் கே ஸ்டுடியோஸ் கணக்குகளுக்கு அனுப்பினேன். ஆனால், திட்டமிட்டபடி அந்த படத்தை எடுக்கவில்லை. இதனால், நான் பணத்தை கேட்டேன். அப்போது அவர், தொடர்ந்து ஏதாவது காரணம் கூறி தள்ளிப்போட்டு பொய் சொல்லி கொண்டே வந்தார். நான் கொடுத்த பணத்தைவைத்துத்தான் கரண் சிங், சோ லாங் வேலி படத்தை தயாரித்துள்ளார்.

Actress model producer
Photo Credit:

மிரட்டினார்: திரைப்படம் ஜூலை 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிந்ததும், பணத்தை திருப்பித் தருமாறு கேட்டதற்கு கரண் சிங் என்னை மிரட்டத் தொடங்கினார். இது தொடர்பாக தனது தொலைபேசி உரையாடல்கள் மற்றும் பண பரிவர்த்தனை விவரங்களையும் ஆதாரமாக அவர் தனது புகாரில் இணைத்துள்ளார். மாடல் அழகி ருச்சி குஜ்ஜரின் புகாரின் அடிப்படையில், ஒஷிவாரா காவல் நிலையத்தில் கரண் சிங் மீது மோசடி செய்தல் 318(4), 352 மற்றும் 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எல்லாமே பொய்: இந்த பிரச்சனை குறித்து பேசிய இந்த திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான மான் சிங், ருச்சி குஜ்ஜர் வேண்டுமென்றே படத்தின் விளம்பரத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில், ருச்சி மற்றும் அவரது நண்பர்கள் மும்பையில் நடைபெற்ற சோ லாங் வேலி திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்துவது போன்று காட்சிகள் பதிவாகியுள்ளன. மேலும் ஆத்திரமடைந்த ருச்சி, கரணை செருப்பால் அடிப்பது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது.

ஆதாரம் இருக்க: 'சோ லாங் வேலி' திரைப்படம் என்பது த்ரிதா சௌத்ரி மற்றும் விக்ரம் கொச்சார் ஆகியோர் நடித்த இந்தி திரைப்படமாகும். க்ரைம், திரில்லர் திரைப்படமான இப்படம், 27ந் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த நிலையில் ருச்சி குஜ்ஜர் வேண்டுமென்றே படத்தின் விளம்பரத்திற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாக, திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் இணை தயாரிப்பாளர் மான் சிங் கூறியுள்ளார். மேலும், , ருச்சி திரைப்படத்தின் வெளியீட்டை தடுக்க முயற்சி செய்தார். ஆனால் நீதிமன்றம் திட்டமிட்டபடி திரைப்படத்தை வெளியிட அனுமதி அளித்தது. ருச்சி குஜ்ஜருக்கும், கரண் சிங்கிற்கும் இடையே நல்ல பழக்கம் உள்ளது. ஒருவேளை ருச்சி எங்கள் திரைப்படத்திற்காக கரணுக்கு பணம் கொடுத்திருந்தால் அதற்கான ஆதாரத்தை அவர் சமர்ப்பிக்க வேண்டும். இது ஒரு விளம்பர ஸ்டண்ட், இதில் வேறு எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். ஹரியானாவைச் சேர்ந்த ஒரு மாடல் அழகியான ருச்சி குஜ்ஜர். இந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தைக்கொண்ட நெக்லஸை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X