Don't Miss!
- News
தடுத்த ஆரிய வந்தேறிகள்.. தமிழர்களை எழுத வைத்து விடியல் தந்த கருணாநிதி பேனா -கார்த்திகேய சிவசேனாபதி
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விவாகரத்துக்கு அதுதான் காரணம்..திருமண முறிவு குறித்து மனம் திறந்த காயத்ரி ரகுராம்!
சென்னை : நடிகை காயத்ரி ரகுராம் திருமண முறிவு குறித்து முதல்முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.
பிரபலமான நடன இயக்குனர் ரகுராமின் மகள் தான் காயத்ரி. இவர் 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தின் மூலம் நடிகையாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார்.
இதன் பின் ஸ்டைல் , விசில்,காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
உங்க தலை எங்கன்னு கேட்ட ரசிகர்கள், விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோவுடன் சீக்ரெட் சொன்ன காயத்ரி

நடிகை காயத்ரி ரகுராம்
நடிகையான காயத்ரி ரகுராம் ஒருசில படங்களில் நடன இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதல் சீசனில் ஓவியாவுக்கு அதிக ரசிகர்கள் இருந்த நிலையில், காய்த்ரி ஓவியாவிடம் அதிகமாக சண்டை போட்டு ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து வெளியேறினார்.

ஆறுமாதம் நீக்கப்பட்டார்
அதைத் தொடர்ந்து பாரதி ஜனதா கட்சியில் இணைந்த காயத்ரி ரகுராம், வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பதவியை வகித்து வந்தார். இதையடுத்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்.

பிரிவுக்கு இதுதான் காரணம்
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த, காயத்ரி ரகுராம் தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார். அதில், எனக்கு 22 வயது இருக்கும் போது, அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். இது காதல் திருமணம் இல்லை பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் தான். 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால், அவருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் பிரிந்துவிட்டோம்.

யாரை குற்றம் சொல்வது
விவாகரத்துக்கு யார் காரணம், யாரை குற்றம் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. இப்போது அவருக்கு திருமணமாகிவிட்டது இந்த நேரத்தில் விவாகரத்தானது பற்றி கேட்பது சரியில்லை. சிறுவயதில் திருமணமானதால், அடிக்காடி கோவம் வரும் ஆனால், தற்போது எனக்கு 40 வயதாகிவிட்டதால், கோவம் குறைந்து, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனநிலை எனக்கு வந்துள்ளது என்றார்.