கமல் பட ஹீரோயின் ஜெயபிரதாவை காணவில்லை.. திடீரென என்ன ஆச்சு?.. ஓஹோ அதுதான் விஷயமா?

ஹைதராபாத்: பிரபல தெலுங்கு நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயபிரதா காணவில்லை என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெயபிரதா மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. போலீஸார் நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயபிரதாவை தொடர்ந்து வலை வீசி தேடி வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. கமல்ஹாசனின் சலங்கை ஒலி படத்தின் மூலம் பிரபலமானவர் ஜெயபிரதா என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அரசியலில் என்ட்ரி கொடுத்த பின்னர் தொடர்ந்து பல சரிவுகளை சந்தித்து வரும் ஜெயபிரதா தற்போது வழக்கு ஒன்றிலும் சிக்கித் தவித்து வருகிறார். நடிகை ஜெயபிரதா நீதிமன்றத்தில் ஆஜர் ஆகவேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்திய நிலையில், அவர் காணவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actress and Politician Jayaprada missing, police trying to search her after court orders

சலங்கை ஒலி முதல் தசாவதாரம் வரை: 61 வயதாகும் நடிகை ஜெயபிரதா கமல்ஹாசனின் சலங்கை ஒலி படத்தில் நடித்து தனது இளமை காலத்தில் மிகப்பெரிய பிரபலமடைந்தார். ஆந்திராவில் பிறந்து வளர்ந்த ஜெயபிரதா தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்கள் என அப்போதே பான் இந்தியா நடிகையாக வலம் வந்தார். கடைசியாக கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் "ஹோ ஹோசனம்" பாடலில் நடித்திருப்பார் ஜெயபிரதா.

சாதனை நாயகி ஜெயபிரதா: 1974ம் ஆண்டு தெலுங்கில் வெளியான பூமி கோசம் படத்தில் அறிமுகமான ஜெயபிரதா. கமல்ஹாசனின் மன்மத லீலை படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார். தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, ஏழை ஜாதி என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜெயபிரதாவுக்கு பாலிவுட் பக்கம் பெரிய வாய்ப்புகள் கிடைத்தன.

அரசியல் ஆசை: இந்தி சினிமாவுக்குச் சென்ற பின்னர் ஜெயபிரதாவுக்கு பெரிய பேரும் புகழும் கிடைத்தது. அதை அப்படியே அரசியல் செல்வாக்காக மாற்றி விடலாம் என நினைத்தவர் உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தார். ராஜ்ய சபா எம்பியாகவும் பணியாற்றிய ஜெயபிரதா 2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தார்.

ஜெயபிரதா மீது வழக்கு: தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் ஜெயப்பிரதா. தேர்தலை அவர் சந்திப்பதற்கு முன்பே முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் ஜெயபிரதா ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு போட்ட நிலையில், பல ஆண்டுகளாக அவர் ஆஜராகாமல் நீதிமன்றத்தை தொடர்ந்து அவமதித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அவரை அதிரடியாக கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் போலீஸாருக்கு பிடிவாரண்ட் போட்டுள்ளது.

ஆள் எஸ்கேப்: வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் நடிகை ஜெயபிரதாவை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜெயபிரதாவின் வீட்டுக்கே சென்று போலீஸார் விசாரணை நடத்தியும் அவர் எங்கே இருக்கிறார் என்கிற தகவல் தெரியவில்லையாம். நடிகை ஜெயபிரதா காணவில்லை என்றும் தலைமறைவு என்றும் போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். வரும் 10ம் தேதிக்குள் அவர் ஆஜராவாரா? மாட்டாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X