குஷ்புவுக்கு சிறப்பு நாரி பூஜை.. நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி.. குஷ்பு நெகிழ்ச்சி!

சென்னை: திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது குறித்து நடிகை குஷ்பு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

90 காலகட்டத்தில் டாப் நடிகையாக இருந்த நடிகை குஷ்பு, ரஜினிகாந்த், கமல், விஜய்காந்த், கார்த்திக், பிரபு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

Actress and politician Kushboo shared photos of her performing Naari Pooja at Vishnumaya Temple

அவரின் அழகாலும், நடிப்பாலும் மயங்கிப்போன ரசிகர்கள் இவருக்கு கோவில் கட்டி அழகுப் பார்த்தனர்.

நடிகை குஷ்பு: சினிமாவை தொடர்ந்து இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்துகொண்டார். தற்போது அரசியல், பொது வாழ்க்கை போன்றவற்றில் ஆர்வம் காட்டி வருகிறார். காங்கிரஸில் இருந்த குஷ்பூ அந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்., பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்த குஷ்பூவிற்கு அண்மையில், தேசிய மகளிர் குஷ்பூ உறுப்பினராக பொறுப்பேற்று இருக்கிறார். அரசியல், சினிமாவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

Actress and politician Kushboo shared photos of her performing Naari Pooja at Vishnumaya Temple

திருச்சூர் விஷ்ணுமாயா கோயில்: இந்த நிலையில், திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய, நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், இந்த கோயிலில் சிறப்பு பூஜை செய்ய வருடத்திற்கு ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவார். அந்தவகையில், இந்தமுறை நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிர்ஷ்டமாக உணர்கிறேன்: இது தொடர்பாக நடிகை குஷ்பூ தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில் அவர், திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா அதில் நடைபெற்ற நாரிபூஜை செய்ய நான் அழைக்கப்பட்டதை மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இங்கு அழைப்பார்கள். தெய்வமே அந்த நபரைத் தேர்ந்தெடுப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.

Actress and politician Kushboo shared photos of her performing Naari Pooja at Vishnumaya Temple

அனைவருக்கும் நன்றி: இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோயிலில் உள்ள அனைவருக்கும் எனது நன்றிகள். தினமும் பிரார்த்தனை செய்பவர்களுக்கும், நம்மைக் காக்க ஒரு சூப்பர் சக்தி இருப்பதாக நம்புபவர்களுக்கும் இது இன்னும் பல நல்ல விஷயங்களைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன் என்று சந்தோஷத்தில் கூறி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X