என் அம்மா இருந்து இருந்தா நான் இப்படி ஆகியிருக்க மாட்டேன்.. டிக்டாக் இலக்கியாவின் கண்ணீர் கதை!

சென்னை : என் அம்மா மட்டும் இருந்து இருந்தா நான் இப்படி ஆகியிருக்க மாட்டேன் என்று டிக்டாக் இலக்கியா பேட்டியில் கதறி அழுதுள்ளார்.

டிக்டாக் செயலியில் டபுள் மீனிங் வசனம் மற்றும் அடல்ட் பாடல்களுக்கு டப்ஸ்மேஷ் செய்து பிரபலமானவர் இலக்கியா

டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பிறகும் பல இன்ஸ்டாகிராம் மூலம் விவகாரமான வீடியோவை வெளியிட்டு, பலரின் வசைபாடலுக்கு உள்ளாகி இருக்கிறார் இலக்கியா.

டிக் டாக் இலக்கியா

டிக் டாக் இலக்கியா

இலக்கியா காட்டிய எல்லை மீறிய கவர்ச்சிக்கு பலனாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். நடிகையான பிறகும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் படு மோசமாக உடை அணிந்தும் கவர்ச்சியாக ஆட்டம் போட்டும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

மார்பகத்திற்கு ஊசி போடல

மார்பகத்திற்கு ஊசி போடல

இந்நிலையில், டிக்டாக் இலக்கியா, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், என் மார்பகத்தை நான் ஊசிப் போட்டு பெரியதாக்கியதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை என் அம்மா, பாட்டி ஆகியோருக்கும் மார்பகம் பெரியதாகத்தான் இருக்கும். அதே போலத்தான் எனக்கும் பெரியதாக இருக்கிறது. மார்பகத்தை பெரியதாக்க நான் எந்த சிகிச்சையும் செய்யவில்லை.

அம்மா இறந்து விட்டார்கள்

அம்மா இறந்து விட்டார்கள்

நான் மூன்றாவது படிக்கும் போதே என் அம்மா இறந்து விட்டார்கள் அதன் பிறகு என்னை என் அப்பா பார்த்துக்கொண்டார். ஆனால், நான் எட்டாவது படிக்கும் போது என் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். என் சித்திக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். எனக்கு படிப்பின் மீது ஆர்வம் இல்லாததால், நான் ஒரு பஞ்சு மில்லில் வேலை செய்தேன். அப்போது எனக்கு 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே சம்பளம் கிடைத்தது.

கூட்டத்தோடு கூட்டமாக நின்றேன்

கூட்டத்தோடு கூட்டமாக நின்றேன்

ஆனால், பஞ்சு மில்லில் என்னால் தொடர்ந்து வேலை செய்ய முடியவில்லை, வீசிங் வரத்தொடங்கியதால் வேலையில் இருந்து நின்றுவிட்டேன். அப்போது தான் என் தோழியின் அக்கா வேலை செய்யும் கம்பேனியில் வேலை செய்வதற்காக வந்தேன். இங்கு வந்த போது நான் படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்க ஆயிரம் ரூபாய் தருவதாக சொன்னார்கள் அப்போது தான் சினிமா பற்றியே தெரிந்து கொண்டேன்.

தற்கொலைக்கு முயற்சி செய்தேன்

தற்கொலைக்கு முயற்சி செய்தேன்

யாருடைய துணையும் இல்லாமல் நான் தனிமையில் தான் இருக்கிறேன் மோசமான கமெண்டுகளை பார்க்கும் போது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட தோன்றும், ஒரு முறை தற்கொலைக்கும் முயற்சி செய்தேன். இனி அந்த எண்ணம் வரக்கூடாது என்று எனக்கு நானே ஆறுதல் கூறி கொள்கிறேன். தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் தனியாக இருக்கும் போது கதறி அழுது இருக்கிறேன்.

கதறி அழுத இலக்கியா

கதறி அழுத இலக்கியா

என் அம்மா மட்டும் இருந்து இருந்தா நிச்சயம் நான் இப்படி ஆகி இருக்க மாட்டேன், அவங்க எனக்கு கண்டிப்பாக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்து இருப்பார்கள். என் அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால், சித்தியுடன் வீட்டில் அடிக்கடி சண்டை வரும், இதனால் தான், நான் வீட்டில் இருக்க முடியாமல் சென்னை வந்தேன். என் அம்மா இருந்து இருந்தா இது நடந்து இருக்காது , என் வாழ்க்கையே வேறு மாதிரியாக இருந்து இருக்கும் என்று டிக்டாக் இலக்கியா கதறி கதறி அழுதார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X