மனம் பதறியது.. அம்பானி வீட்டு திருமண விழாவை பார்த்து குமுறிய நடிகை..என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: சமீபத்தில் நடந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகினரும், விஜபிக்களும் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டம் என மூன்று நாள் ஜாம் நகர் திருவிழாப்போல இருந்தது. இதில் கலந்து கொண்ட நடிகை ஒருவர்,அதில் நடந்த சில விஷயத்தை பார்த்து மனம் நொந்துவிட்டதாக இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் கடைசி மகனான ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமணம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 12ந் தேதி நடைபெற உள்ளது. திருமணத்திற்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், மார்ச் 1ந் தேதி முதல் 3-ஆம் தேதி வரை ஆனந்த் - ராதிகாவின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி ஜாம்நகர் கோலாகலமாக நடைபெற்றது.

பிரபலங்கள்: இதில், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், மெட்டா நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க், பாப் பாடகி ரிஹானா, அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித், ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷித் கான், சினிமா பிரபலங்கள் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ராம் சரண் ஆகியோர் பங்கேற்றனர்.
பாரம்பரிய உடையில்: மேலும், இந்திய திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் கலந்து கொண்டார். பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் சட்டை அணிந்து ரஜினிகாந்த் இதில் கலந்து கொண்டார். அதே போல ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டை தன் வசப்படுத்திய இயக்குநர் அட்லீ தனது மனைவியுடன் கலந்து கொண்டார். கோலிவுட் சினிமாவில் இருந்து ரஜினி, அட்லீ இருவர் மட்டுமே கலந்து கொண்டனர்.
டிரம்பின் மகள்: இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சியில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவானா கலந்த கொண்டார். இதில் இவான்கா அழகான மஞ்சள் நிற லெஹங்கா உடையில் தனது கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் மகள் அரபெல்லா ரோஸ் கலந்து கொண்டார். அப்போது இவர் அலங்காரம் செய்யப்பட்டு அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த யானை முன் எடுத்த போட்டோவை இவான்கா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து இருந்தார்.
மனம் பதறியது: இந்த போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த, பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வர்ஷியின் மனைவியும், முன்னாள் விஜேவுமான மரியா கொரேட்டி, இது போன்று எந்த விலங்கிற்கும் நடக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக மீட்கப்படும் விலங்குகளுக்கு நடக்கவே கூடாது. அந்த போட்டோவை பார்த்து மனம் பதறியது, மக்கள் கூட்டம் சத்தத்திற்கு நடுவில் யானை எப்படி ஒரு பொருள் போல நின்றது என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவி பலரை யோசிக்க வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











