வலியால் அவதிப்பட்ட குஷ்பு.. விமானநிலையத்தில் இதுகூடவா இல்லை.. மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!

சென்னை : நடிகை குஷ்பு சென்னை விமான நிலையத்தில் சர்க்கர நாற்காலி கிடைக்காமல் கால் வலியால் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக, இளைஞர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தவர்ந டிகை குஷ்பு. இவர் தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிப்பு, அரசியல், தயாரிப்பு என பன்முகத் தன்மை கொண்டவராக நடிகை குஷ்பு திகழ்ந்து வருகிறார். சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, தவறு என தெரிந்தால் அதை தைரியமாக தட்டிக்கேட்பவராக இருக்கிறார்.

நடிகை குஷ்பு

நடிகை குஷ்பு

சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்திலும் தனது தடத்தை பதித்து அதில் வெற்றியும் பெற்ற நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்து அரசியலிலும் கலக்கி வருகிறார். குஷ்பு இரு தினங்களுக்கு முன்,காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து, ஒரு வெளிநாட்டு பயணத்திற்கு தயரான போது விபத்தில் சிக்கி காயம் அடைந்து விட்டதாக தெரிவித்து இருந்தார். மேலும், ஒரு விபத்து அன்றாட வாழ்வை சீர்குலைத்து வலியை ஏற்படுத்தும்போது ஒருவர் என்ன செய்வார். மற்றவர்கள் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும் எனர்ஜியான பதிவினை போட்டிருந்தார்.

வருத்தப்பட்ட குஷ்பு

வருத்தப்பட்ட குஷ்பு

இந்நிலையில், நடிகை குஷ்பு இன்று காலை வெளியூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்துள்ளா. கால் வலி அதிகமாக இருந்ததால் எனக்கு சர்க்கர நாற்காலி தேவைப்பட்டது. ஆனால், விமான நிலையத்தில் சர்க்கர நாற்காலி கிடைக்காமல் அவதிப்பட்டதாக வருத்ததுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார்.

இது கூடவா இல்லை?

இது கூடவா இல்லை?

அதில், ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயரை டேக் செய்து, காலில் காயம் ஏற்பட்ட பயணியை அழைத்து செல்ல தேவைப்படும் சர்க்கர நாற்காலி கூடவா உங்களிடம் இல்லை. இதற்காக நான் அரை மணிநேரம் கால் வலியுடன் காத்திருந்தேன். அதன் பின் வேறு ஒரு விமான நிறுவனத்திடம் இருந்து சர்க்கர நாற்காலியை வாங்கி வந்து என்னை அழைத்து சென்றனர் என பதிவிட்டிருந்தார்.

மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா

மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா

குஷ்புவின் இந்த பதிவினைப் பார்த்த ஏர் இந்தியா நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும், குஷ்புவிற்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து ஏர் இந்தியா நிறுவனம், இந்த விவகாரம் உடனடியாக சென்னை விமான நிலைய குழுவுக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் அந்நிறுவனம் ட்விட்டரில் பதிலளித்து உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X