பாக்கும்போதே எச்சில் ஊறுது.. வைரலாகும் வட சென்னை நடிகைகளின் 'கேக்' வீடியோ.. கெஞ்சும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகைகள் ஆண்ட்ரியாவும் ஐஸ்வர்யா ராஜேஷும் ஒன்றாக கேக் செய்து சாப்பிடும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் எச்சில் ஊற்றியுள்ளனர்.
நடிகைகள் ஆண்ட்ரியாயும் ஐஸ்வர்யா ராஜேஷும் தமிழ் சினிமாவில் தங்களுக்கு என ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர்.
எந்த கேரக்டர் என்றாலும் இரண்டு நடிகைகளும் அசால்ட்டாக நடித்து வருகின்றனர்.

கேக் செய்து சாப்பிட்டு
இவர்கள் இரண்டு பேரும் இணைந்து வட சென்னை படத்தில் நடித்தனர். இதில் இருவரின் கதாப்பாத்திரமும் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகைகள் இருவரும் சேர்ந்து கேக் செய்து சாப்பிட்டு வாழ்க்கையை கொண்டாடியுள்ளனர்.

பரிமாறும் ஆண்ட்ரியா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கக தளதளவென தான் செய்த கேக்கை எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பரிமாறுகிறார் நடிகை ஆண்ட்ரியா.

நடிகைகளின் ஃபன்
ஆட்டம் பாட்டத்துடன் இருவரும் ஃபன் பண்ணுகிறார்கள். இந்த வீடியோவை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
Recommended Video

கெஞ்சும் ஃபேன்ஸ்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு என்றும், எப்படியோ ஒரு வழியா குக்கிங் முடிச்சுட்டீங்க எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள் என்றும் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் பார்க்கும் போதே அருமையாக இருக்கிறது என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











