மாலத்தீவில் ஜாலி.. ஒய்யார நடை போட்டு உசுப்பேத்தும் ஆண்ட்ரியா.. பிகினி ஷூட் எதிர்பார்க்கலாமா?

சென்னை: நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா மாலத்தீவில் ஜாலி பண்ணும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் படத்தில் சிறு வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து, பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.

தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு அவரது நடிப்பில் வட சென்னை படம் ரிலீஸானது.

திருமணமான நடிகருடன் தவறான உறவு

திருமணமான நடிகருடன் தவறான உறவு

இந்தப் படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்த ஆண்ட்ரியா, திருமணமான ஒரு நடிகருடன் கொண்ட தவறான தொடர்பால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு ஆளானதாக தெரிவித்தார்.

கடைசியாக மாஸ்டர் படம்

கடைசியாக மாஸ்டர் படம்

அவரது இந்த தகவல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, சினிமாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடைசியாக நடிகை ஆண்ட்ரியா விஜயுடன் மாஸ்டர் படத்தில் நடித்தார்.

கமலின் விக்ரம் படத்திலும் கமிட்டட்

கமலின் விக்ரம் படத்திலும் கமிட்டட்

வானதி என்ற கேரக்டரில் நடித்தார் ஆண்ட்ரியா. தொடர்ந்து வட்டம், மாளிகை, கா, அரண்மனை 3, பிசாசு 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கமலின் விக்ரம் படத்திலும் இணைந்துள்ளார் ஆண்ட்ரியா.

நான்காவது முறையாக கமலுடன்

நான்காவது முறையாக கமலுடன்

ஏற்கனவே நடிகர் கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. தற்போது நான்காவது முறையாக விக்ரம் படத்திலும் இணைந்துள்ளார் ஆண்ட்ரியா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஆண்ட்ரியா அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

மாலத்தீவில் ஓய்வெடுக்கும் ஆண்ட்ரியா

மாலத்தீவில் ஓய்வெடுக்கும் ஆண்ட்ரியா

இந்நிலையில் ஆண்ட்ரியா தற்போது ஷேர் செய்துள்ள வீடியோ ஒன்று இணையத்தை தெறிக்க விட்டு வருகிறது. அதாவது நடிகை ஆண்ட்ரியா தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரை வீட்டில் தங்கியுள்ள ஆண்ட்ரியா, தான் தங்கியிருக்கும் வீட்டின் என்ட்ரென்ஸ் முதல் பாத்ரூம் வரை ஒவ்வொரு அறையாக திறந்து காட்டி குஷிப்படுத்தியுள்ளார்.

பிகினி ஷூட்டை எதிர்பார்க்கலாமா?

பிகினி ஷூட்டை எதிர்பார்க்கலாமா?

இறுதியாக பாத்ரூம் வழியாக கடலில் இறங்கியும் தீயை மூட்டியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா. நடிகை ஆண்ட்ரியா இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அமேஸிங் பிளேஸ் என கூறியுள்ளனர். அதே நேரத்தில் பிகினியை எதிர்பார்க்கலாமா என்றும் கேட்டுள்ளனர்.

வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்

வீடியோவுக்கு குவியும் லைக்ஸ்

மாலத்தீவு செல்லும் நடிகைகள் பலரும் பிகினி போட்டோ ஷூட் நடத்துவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் தற்போது மாலத்தீவு சென்றுள்ள ஆண்ட்ரியாவும் பிகினியில் போட்டோ ஷூட் நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆண்ட்ரியாவின் இந்த அசத்தல் வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X