Actor Daniel balaji: தம்பி.. டேனியல் பாலாஜி மறைவிற்கு அஞ்சலி செலுத்திய நடிகை ஆன்ட்ரியா!

சென்னை: நடிகர் டேனியல் பாலாஜி நேற்றிரவு மாரடைப்பால் காலமானார். 48 வயதேயான டேனியல் பாலாஜியின் மறைவு பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவிற்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். சித்தி சீரியல் மூலம் மிகுந்த கவனத்தை பெற்றவர் டேனியல் பாலாஜி. இந்த சீரியல் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றுத் தந்தது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட டேனியல் பாலாஜி, தன்னுடைய அதிரடி வில்லத்தனமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.

கௌதம் மேனனின் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு படங்களில் வில்லன் கேரக்டரில் மிரட்டிய டேனியல் பாலாஜி, தொடர்ந்து வெற்றி மாறனின் பொல்லாதவன் படத்தில் மெயின் வில்லனாகவும் வடசென்னை படத்தில் அமீரின் தம்பியாகவும் பட்டையை கிளப்பியிருந்தார். இந்தப் படத்தில் தனுஷ், ஆன்ட்ரியா, கிஷோர், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றிமாறனுக்கு மட்டுமில்லாமல் தனுஷிற்கும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. டேனியல் பாலாஜியின் கேரக்டரும் படத்தில் மிகப்பெரிய பலமாக அமைந்தது.

Actress Andrea condolence for Daniel balaji s death in instagram

நடிகர் டேனியல் பாலாஜி: நடிகர் டேனியல் பாலாஜி வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், வடசென்னை, காக்க காக்க போன்ற படங்களில் வில்லன் கேரக்டர்களில் நடித்து தமிழின் முக்கியமான வில்லனாக இருந்தவர். இவரது சைக்கோத்தனமாக வில்லன் கேரக்டர் மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் ரசிகர்களிடையே பெற்றவை. முன்னதாக சித்தி சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர், இந்த சீரியலின் மூலமாகவே தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் முன்னணி வில்லனாக நடித்து ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கட்டிப் போட்டவர்.

உதவி இயக்குநராக டேனியல் பாலாஜி: தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடித்துவந்த டேனியல் பாலாஜி, நல்ல படங்களில் நடித்து தான் பெற்ற பெயரை காப்பாற்றிக் கொள்ளும்வகையில் அனைத்து படங்களிலும் நடிக்க தான் விரும்பவில்லை என்று பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். முன்னதாக சீரியல் நடிகராக தன்னுடைய பயணத்தை துவங்கிய டேனியல் பாலாஜி, தன்னுடைய அண்ணன் முரளியின் காமராசு படத்தில் உதவி இயக்குநராகவும் செயல்பட்டுள்ளார். அந்தப் படத்தில் நடித்த லைலாவிற்கு தமிழ் தெரியாத நிலையில், அவருக்கு தமிழிலிருந்து இந்தியில் புரியவைத்து சிறப்பாக நடிக்க துணை புரிந்துள்ளார்.

ஆன்ட்ரியா இரங்கல்: நேற்றிரவு காலமான டேனியல் பாலாஜியின் உடல் இன்று மாலை 4 மணியளவில் ஓட்டேரி இடுகாட்டில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. டேனியல் பாலாஜியின் மறைவையொட்டி அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அவருடன் வடசென்னை படத்தில் இணைந்து பணியாற்றிய ஆன்ட்ரியா தன்னுடைய இரங்கலை இன்ஸ்டாகிராம் மூலம் பதிவு செய்துள்ளார். தம்பி என்றும் குறிப்பிட்டு தன்னுடைய இரங்கலை பதிவிட்டுள்ளார். வடசென்னை படத்தில் டேனியல் பாலாஜியின் போஸ்டரையும் இணைத்துள்ளார்.

சின்னத்திரை டூ மிரட்டல் வில்லன்: சின்னத்திரை மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த டேனியல் பாலாஜி சிறுசிறு கேரக்டர்களில் நடித்துவந்த நிலையில், கௌதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படமே சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கான தோற்றத்தில் நடித்திருபபார். தொடர்ந்து வில்லனாக இவர் நடித்த படங்கள் மிகப்பெரிய கவனத்தை பெற்றன. தற்போது புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் ரசிகர்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது அண்ணன் மகன் அதர்வா, வெற்றிமாறன், கவுதம் மேனன், அமீர் உள்ளிட்டவர்கள் டேனியல் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X