Actress Andrea: லேடி டானாக களமிறங்கும் ஆண்ட்ரியா.. அட இந்த ஹீரோவுக்கு வில்லியா?

சென்னை: பாடகியாக தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஆண்ட்ரியா. தொடர்ந்து இவரது அழகு மற்றும் கவர்ச்சியை பார்த்து இயக்குனர்கள் இவருக்கு நடிகையாகும் வாய்ப்பையும் கொடுத்தனர். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின்மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்த ஆண்ட்ரியா, தனது முதல் படத்திலேயே ஒரு சிறுவனுக்கு தாயாக நடித்து அதிரடி கிளப்பியிருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்ட ஆண்ட்ரியா நடிப்பில் இறுதியாக அரண்மனை 3 படம் வெளியாகி கவனத்தை பெற்றது. தொடர்ந்து வெப் தொடர் ஒன்றிலும் நடித்திருந்தார்.

ஆண்ட்ரியாவிற்கு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த படமும் அமையவில்லை. தன்னுடைய சொந்த பிரச்சினைகளால் அவர் சினிமாவில் நடிக்காமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆயினும் தொடர்ந்து பின்னணி பாடகியாக சில பாடல்களை வெற்றிகரமாக கொடுத்து வருகிறார். இந்நிலையில் ஆண்ட்ரியா அடுத்ததாக தமிழில் அதிரடியாக நடிக்கும் படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இந்தப் படத்தின் அறிவிப்பு இந்த மாதத்திலேயே வெளியாகவுள்ளதாகவும் இந்த மாதத்திலேயே படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress Andrea is reportedly playing the role of Female gangster with Kavin s next movie

நடிகை ஆண்ட்ரியா: நடிகை ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் தான் ஹீரோயினாக தமிழில் என்ட்ரி கொடுத்தார். தன்னுடைய முதல் படத்திலேயே சிறுவன் ஒருவருக்கு தாயாக நடித்து அதிரடி கிளப்பியிருந்தார். தேர்ந்தெடுத்த கதைகளில் தனக்கு நடிக்கும் வாய்ப்பு உள்ள கேரக்டர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. சினிமாவில் இவர் பின்னணி பாடகியாக அறிமுகமான நிலையில், அடுத்தடுத்து இவரது வாய்ஸில் பல அதிரடி பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. அந்த வகையில் புஷ்பா படத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா என்ற பாடல் மிகப்பெரிய அளவில் இவருக்கு வரவேற்பை பெற்று தந்தது.

Actress Andrea is reportedly playing the role of Female gangster with Kavin s next movie

இசை நிகழ்ச்சிகளில் ஆண்ட்ரியா: இந்நிலையில் பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் செயல்பட்டு வரும் ஆண்ட்ரியா தொடர்ந்து பல இசை நிகழ்ச்சிகளிலும் சர்வதேச அளவில் பாடி வருகிறார். ரசிகர்களை கவரும் வகையில் இவரது வாய்ஸ் மிகவும் யூனிக்காக காணப்படுகிறது. இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார் ஆண்ட்ரியா. இது அவரது ரசிகர்களை தொடர்ந்து கேள்வி கேட்க செய்து வருகிறது. ஆனால் இதற்கும் தனது சமீபத்திய பேட்டியில் அவர் பதில் அளித்துள்ளார். தான் முன்னதாக தனக்கு திருமணம் நடக்கவில்லை என்பது குறித்து கவலைப்பட்டதாகவும் ஆனால் தற்போது திருமணத்தில் தனக்கு ஆர்வம் இல்லை என்றும் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

திருமண ஆசை இல்லை: திருமணம் செய்து கொண்டு பலர் மகிழ்ச்சியாக இல்லாததையும் திருமணம் செய்யாமல் பலர் மகிழ்ச்சியாக வாழ்வதையும் தான் பார்த்து வருவதாகவும் அதனால் தன்னுடைய மகிழ்ச்சிக்கு திருமணம் முக்கியமில்லை என்று தான் தீர்மானித்ததாகவும் ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார். சில காதல் தோல்விகளால் தான் வருந்தியதாகவும் இதுவும் திருமணத்தின் மீதான தனது ஆர்வத்தை குறைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய விஷயங்களால் சில காலங்கள் நடிப்பில் இருந்து விலகி இருந்த ஆண்ட்ரியா ,தற்போது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அடுத்ததாக கவின் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் அவருக்கு வில்லியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் ஆண்ட்ரியா.

லேடி டானாக ஆண்ட்ரியா: புதுமுக இயக்குனர் இயக்கவுள்ள இந்த படத்தில் லேடி டானாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாதத்தில் வெளியாகும் என்றும் இந்த மாதத்திலேயே இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார் ஆண்ட்ரியா. தொடர்ந்து தனது இசை நிகழ்ச்சிகள் குறித்த அப்டேட்களை பதிவிட்டு வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 3.3 மில்லியன் பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X