மீண்டும் டைம்லைனில் ஆண்ட்ரியா.. ஆண் நடிகருடன் அதீத நெருக்கம்.. வைரலாகும் படுக்கையறை அந்தரங்க காட்சி!
சென்னை: திருமணமான நபருடன் தவறான உறவில் இருந்ததாக கூறிய நடிகை ஆண்ட்ரியா மீண்டும் பரபரப்பில் சிக்கியுள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா அண்மையில் பெங்களூரில் நடைபெற்ற கவிதை போட்டியில் கலந்துகொண்டு தான் எழுதிய கவிதை தொகுப்பை வாசித்தார். புரோக்கன் விங் அதாவது முறிந்த சிறகுகள் என பெயரிடப்பட்ட அந்த கவிதை தொகுப்பு முழுவதும் சோகம் நிரம்பியிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்களும் பார்வையாளர்களும் இவ்வளவு சோகத்திற்கு காரணம் என்ன என கேட்க, தான் வாழ்க்கை சந்தித்த பெரும் ஏமாற்றத்தை பகிர்ந்து கொண்டார்.

உடலளவில் துன்புறுத்தல்
அதாவது, திருமணமான ஆண் நண்பர் ஒருவருடன் தவறான உறவு வைத்திருந்ததாக கூறி கலக்கமடைய செய்தார். மேலும் அந்த நபர் தன்னை உடலளவில் பெரிதும் துன்புறுத்தியதாகவும் கூறினார் ஆண்ட்ரியா.

நடிகர்கள் பெயர்
இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஆண்ட்ரியாவை ஏமாற்றிய அந்த நபர் யார் என்றும் கேள்விகள் எழுந்தன. இதில் ஒரு சில நடிகர்களின் பெயரும் அடிபட்டது.

புத்தகம்
இதைத்தொடர்ந்து அந்த நபரின் நடவடிக்கையாலும் ஏமாற்றத்தாலும் மிகுந்த மன அழுத்ததில் இருந்ததால், பல மாதங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டதாக கூறினார். அந்த வலியிலிருந்து மீண்ட தான் தான்பட்ட துன்பங்களைதான் இந்த புத்தகத்தில் எழுதியிருப்பதாகவும் கூறினார்.

படுக்கையறை காட்சிகள்
நடிகை ஒருவர் திருமணமான நண்பருடன் ஏற்பட்ட தவறான உறவால் தான் ஏமாற்றப்பட்டதை கவிதை தொகுப்பாக எழுதி வெளியிட்டதால் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வந்தார். இந்நிலையில் நடிகர் ஒருவருடன் அதீத நெருக்கத்தில் இருந்த படுக்கையறை காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

இந்தி படம்
அதாவது, நடிகர் சித்தார்த்துடன் தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் என்ற இந்தி படத்தில் வெளியான காட்சிதான் அது. அந்தப் படம் தமிழில் அவள் என்ற பெயரிலும் தெலுங்கில் க்ருஹம் என்ற பெயரிலும் வெளியானது.

இணையத்தில் வைரல்
இந்தப் படத்தில் நடிகை ஆண்ட்ரியாவும் சித்தார்த்தும் முன்னணி கதாப்பாத்திரத்திங்களில் நடித்திருந்தனர். அந்தப்படத்தில் இடம்பெற்ற அந்த படுக்கையறை அந்தரங்கக் காட்சிதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











