தனுஷை பகத் ஃபாசிலுடன் ஒப்பிட்ட நடிகை ஆண்ட்ரியா.. எதற்காக தெரியுமா!

சென்னை : பாடகியாக அறிமுகமாகி இப்போது மிகச் சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் கலக்கிய கொண்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா

தமிழ் மட்டுமல்லாமல் மலையாள மொழியிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ளார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் தனுஷை பகத் ஃபாசிலுடன் ஆண்ட்ரியா ஒப்பிட்டு பேசியுள்ளார்

சிறந்த நடிகையாக

சிறந்த நடிகையாக

திரைத்துறையில் பல துறைகளில் பணியாற்றி கொண்டுள்ள பலரும் இப்பொழுது நடிப்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா இப்போது தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார். கேட்டவுடனேயே மனதை மயக்கும் அழகிய பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் மூலம் கதாநாயகியாகவும் அறிமுகமானார். ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, மாஸ்டர், அரண்மனை என வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்த ஆண்ட்ரியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது

சவாலான கதாபாத்திரங்களை

சவாலான கதாபாத்திரங்களை

நடிகைகள் பலரும் தயங்கும் பல சவாலான கதாபாத்திரங்களை தைரியத்துடன் ஏற்று நடித்து வரும் ஆண்ட்ரியா இப்பொழுது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு இரண்டில் நடித்து வருகிறார். பிசாசு ஒன்று மிகப் பெரிய வெற்றி பெற்ற சூழலில் அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது.

சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்துள்ளார்

சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்துள்ளார்

பிசாசு இரண்டில் ஆண்ட்ரியா இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேலும் இதில் ஆண்ட்ரியா சர்ச்சைக்குரிய பல காட்சிகளிலும் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. பிசாசு இரண்டில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து விஜய் சேதுபதி, பூர்ணா, அஜ்மல் மற்றும் சந்தோஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றது

பகத் ஃபாசிலுடன் தனுஷை ஒப்பிட்டு

பகத் ஃபாசிலுடன் தனுஷை ஒப்பிட்டு

கா,நோ என்ட்ரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோல்களில் நடித்து வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் ஒட்டுமொத்த இந்தியாவையே கலக்கியவர். ஊ சொல்றியா மாமா பாடலை பாடி இளசுகள் முதல் பெரிசுகள் வரை அனைவரையும் ஆட்டம் போட வைத்தவர். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் மிக பிரபலமான நடிகையாக உள்ள ஆண்ட்ரியா மலையாள நடிகர் பகத் ஃபாசிலுடன் தனுஷை ஒப்பிட்டு பேசியுள்ளார். தமிழில் எப்படி தனுஷ் நடிப்பு உள்ளதோ அதேபோல மலையாளத்தில் பகத் ஃபாசிலின் நடிப்பும் சட்டிலாக இருக்கும் தமிழில் எனக்கு தனுஷ் நடிப்பு எந்த அளவுக்கு பிடிக்குமோ அதே போல பகத் ஃபாசில் நடிப்பும் எனக்கு பிடிக்கும் என தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் ஆண்ட்ரியா இவ்வாறு பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X