இசை மழையில் நனையத் தயாரா? கோவையில் ஆண்ட்ரியா நடத்தும் சூப்பர் நிகழ்ச்சி? எப்போ தெரியுமா?

சென்னை: நடிகை ஆண்ட்ரியா கோவையில் தரமான சம்பவத்தை செய்யப்போவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா எனக்கு பாட்டு மட்டுமில்ல நடிக்கவும் வரும் என்பதை பல படங்களில் நடித்து நிரூபித்து இருக்கிறார்.

வடசென்னை திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியாவின் நடிப்பும் சும்மா வேறலெவலில் இருக்கும். அதேபோல ராஜன் பொண்டாட்டிடா என்று இவர் பேசும் வசனம் இவருக்கு கைத்தட்டலை பெற்றுத்தந்தது.

பிடித்தமான நடிகை: நடிகை ஆண்ட்ரியா சரத்குமார், ஜோதிகா நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாரின் மனைவியாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்த ஆண்ட்ரியா புடவை,லூஸ் ஹேர், பெரிய பொட்டுடன் வலம் வந்து நடிகர்களின் பேவரைட் ஹீரோயின் ஆனார்.

actress andrea jeremiah music event in coimbatore

நடிகை ஆண்ட்ரியா: பிசாசு 2 , நோ என்ட்ரி, கா, மாளிகை, மேலும் பெயரிடப்படாத இரண்டு படங்களை கைவசம் வைத்து இருக்கும் ஆண்ட்ரியா, செய்தியாளர்களிடம் பேசினார். அதில், கோயம்புத்தூரில் வரும் ஜூலை 1ம் தேதி, நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் மாலை 6 மணிக்கு ஆண்ட்ரியா லைவ் இன் கோவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்றார். கல்லூரி மாணவர்களிடம் அதிகம் பேசி இருக்கிறேன். ஆனால், பொதுமக்கள் மத்தியில் நடக்கும் முதல் நிகழ்ச்சி இதுதான்.

ஊ சொல்றியா மாமா: இந்த நிகழ்ச்சியில் இளையராஜா பாடல்கள் முதல் அனைத்து பாடல்களையும் பாட உள்ளேன். கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர் நான் பாடியுள்ள பாடல்களில் , இதுவரை ஹு இஸ் தி ஹீரோ மற்றும் ஊ சொல்றியா பாடலை கேட்டு அனைவரும் ஆட்டம் போட்டு வருகின்றனர். இந்த பாடல்தான் எனது முதல் பாடலாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பாட இருக்கிறேன்.

எதுவும் ஈஸி இல்லை: தொடர்ந்து இரண்டு மணிநேரம் பாடுவது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. அனைத்து விஷயங்களிலுமே ஒரு கஷ்டம் உள்ளது. கடந்த 15 வருடம் மியூசிக் கிளாசுக்கு சென்றுள்ளேன். அது தான் இப்போது வரை என்னை பாட வைக்கிறது என கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X