ஹாட்டா ஒரு முத்தம்.. எனக்கும் ஒன்னு.. கெஞ்சி கேட்ட ரசிகர்.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை: மிகப் பிரம்மாண்டமான நட்சத்திரங்களுடன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விரைவில் வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

இதைத்தொடர்ந்து இவர் கா என்ற படத்தில் லீட் ரோலிலும் நடித்து வருகிறார். இதனிடையில் தனது சமூக வலைதளங்களில் அழகான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஆண்ட்ரியா.

தற்பொழுது தான் மிகவும் விரும்பும் ஒருவருக்கு லிப்-லாக் கிஸ் அடித்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டபடி கெஞ்சி கேட்டு வருகின்றனர்.

செல்ல பிராணியாக

செல்ல பிராணியாக

பொதுவாக பெண்களுக்கு ஆண்களைப் பிடிக்கிறதோ இல்லையோ வாயில்லா ஜீவன்களை மிகவும் பிடித்திருக்கிறது. குறிப்பாக நாய்களை மிகவும் விரும்பும் பெண்கள் விதவிதமான மேல் நாட்டு நாய்களை தங்களது வீடுகளில் வளர்த்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தமிழ் ஹீரோயின்களும் தங்களது வீட்டில் செல்ல பிராணியாக பல நாய்களை வளர்த்து வருகின்றனர்.

பாடகி ஆண்ட்ரியா

பாடகி ஆண்ட்ரியா

அழகான குரலுக்கு சொந்தக்காரரான பாடகி ஆண்ட்ரியா, மிகப்பிரபலமான பாடல்களின் மூலம் தமிழ் மக்களுக்கும் மிகவும் பரிச்சயமாகி தற்பொழுது நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், பச்சைக்கிளி முத்துச்சரம், வடசென்னை போன்ற பல படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பல லட்சம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த ஆண்ட்ரியா தற்போது தமிழில் சிறந்த நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சந்திராவாக மிரட்டி

சந்திராவாக மிரட்டி

வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் சந்திராவாக வந்து அனைவரையும் மிரட்டி இருந்த ஆண்ட்ரியா தற்பொழுது விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மாஸ்டர் படத்தைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு தனது கதாபாத்திரத்தை பற்றி விரிவாக எதுவும் சொல்லாமல் உங்களுக்கெல்லாம் மிகப்பெரிய சர்ப்ரைஸ் இருக்கு என சொல்லி அனைவரிடமும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறார்.

OTT-ல் வெளியாகுமா

OTT-ல் வெளியாகுமா

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா, இல்லை அதற்கு முன்பாகவே OTT தளத்தில் வெளியாகுமா, என அனைவரும் வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஆண்ட்ரியா வழக்கம்போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேக் செய்வது, சமையல் செய்வது என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

லிப்-லாக் கிஸ்

லிப்-லாக் கிஸ்

சமீபத்தில் இவர் கேக் செய்தவாறு அழகிய உடையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வந்த நிலையில் தற்போது ஸ்டன்னிங்கான கவர்ச்சி உடையில் தான் செல்லமாக வைத்திருக்கும் ஒரு நாய் பொம்மைக்கு லிப்-லாக் கிஸ் அடித்து அந்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தவம் கிடக்கும் ரசிகர்கள்

தவம் கிடக்கும் ரசிகர்கள்

ஏற்கனவே ஆண்ட்ரியாவிடம் முத்தம் வாங்க தவமாய் தவம் கிடக்கும் ரசிகர்கள் தற்பொழுது இந்த புகைப்படத்தை பார்த்து பேசாம நாம அந்த நாய் பொம்மையா பிறந்திருக்கலாமோ என பீல் செய்துகொண்டு வருகின்றனர்.

கெஞ்சிகேட்ட ரசிகர்

கெஞ்சிகேட்ட ரசிகர்

அதில் ஒரு ரசிகர் அந்த பொம்மையாக என்னை நினைத்துக் கொள்ளுங்கள்எனக்கும் ஒன்னு என தனது பேராசையை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொருவர் தனது பதிவிற்கு லைக் போடும் படி கெஞ்சி கேட்டு இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X