Andrea: வீட்டை அடமானம் வைத்து ரிஸ்க் எடுத்த ஆண்ட்ரியா… ‘மாஸ்க்’ வெற்றி காப்பாற்றுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான குரலும், பல்திறமைகளும் கொண்ட நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா, 'மாஸ்க்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார். நடிகர் கவின் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியுள்ளார். நடிகை ருஹானி சர்மா, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்ட பலர் இணைந்து உருவாக்கிய இப்படம் நேற்று முன் தினம் தியேட்டரில் வெளியானது.
'மாஸ்க்' படத்தின் இயக்குநர் விகர்ணன் அசோக், பிரபல இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இதனால், இந்த திரைப்படம் வெற்றிமாறனின் மேற்பார்வையில் உருவாகி உள்ளது. ஒரு ஷாப்பிங் மாலில் 466 கோடி பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. அந்த பணத்தை கொள்ளையடித்தது யார்... அந்த படம் ஷாப்பிங் மாலுக்குள் வந்தது எப்படி என்பதை சுற்றியே இப்படத்தின் கதை நகர்கிறது. இதில், டிடெக்டிவாக கவினும், சமூக சேவகியாக நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாளிலேயே திரைப்படம் ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால்,
படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மாஸ்க்: சில நாட்களுக்கு முன்பு நடந்த இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவின், இந்த படத்தின் மூலம் நடிகை ஆண்ட்ரியா தயாரிப்பாளராக களமிறங்கி உள்ளார்.இந்த படத்தை எடுப்பதற்காக ஆண்ட்ரியா தான் வசிக்கும் வீட்டை அடமானம் வைத்து முதலீடு செய்து இருக்கிறார். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, ஆண்ட்ரியாவின் வீடு பத்திரமாக மீட்கப்படும். ஆண்ட்ரியாவின் இந்த முயற்சி அவருக்குப் பெரிய வெற்றியைத் தரும் என நம்புகிறேன் என்று கவின் பேசி இருந்தார். இந்த தகவல் ரசிகர்களையும் தொழில்துறையினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நடிகை, குறிப்பாக முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஒருவர், தான் வாழ்ந்து வரும் வீட்டையே அடமானம் வைத்து சினிமாவில் முதலீடு செய்வது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. 'மாஸ்க்' படத்திற்காக தனது வீட்டையே அடமானம் வைத்திருப்பது, ஆண்ட்ரியாவின் சினிமா மீதான அர்ப்பணிப்பை காட்டுகிறது.
அரசன் படத்தில்: அதே நிகழ்ச்சியில் பேசிய ஆண்ட்ரியாவின், "வடசென்னை படத்தில் நான் நடித்த 'சந்திரா' கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்ததே தவிர, வாய்ப்பு வரவில்லை என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார். இதையடுத்து யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், வெற்றிமாறன் மற்றும் சிம்பு இணையும் 'அரசன்' படத்தில் நான் நடிக்கிறேன் என்று அவர் உறுதி செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











