கிளம்பி விட்டார்கள்.. ஓவர் எமோஷ்னல் ஆன ஆண்ட்ரியா.. ரொம்ப மிஸ் பண்ணுவதாக உருக்கம்!

சென்னை: நடிகை ஆண்ட்ரியா தன் மனதுக்கு நெருக்கமானவர்கள் இடத்தை காலி செய்துவிட்டதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் ஆவார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார்.

வட சென்னை படத்திற்கு பிறகு சினிமாவில் அதிகம் தலைக்காட்டாத இவர் தற்போது விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

அடுத்தடுத்து படங்கள்

அடுத்தடுத்து படங்கள்

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளதால் இவர் யாருக்கு ஜோடி என இதுவரை உறுதியாக தெரியவில்லை. தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார் ஆண்ட்ரியா. லாக்டவுன் நேரத்தில் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர்.

ஆண்ட்ரியா உருக்கம்

ஆண்ட்ரியா உருக்கம்

தொடர்ந்து கேக் செய்வது, விதவிதமாக சமைப்பது என கலக்கல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் வொர்க்கவுட் செய்வது, யோகா செய்வது என ரசிகர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா ரொம்பவே உருக்கமாக ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.

வீட்டை காலி செய்து..

வீட்டை காலி செய்து..

அதாவது இன்று காலை நான் எழுந்த போது தேனீக்கள் அவர்களின் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்பியிருந்ததை பார்த்தேன். ஒரு வித்தியாசமான இழப்பு உணர்வால் நான் கடக்கப்படுகிறேன். என் ஜன்னல் வழியாக அவர்கள் ஒலிப்பதை நான் இழப்பேன்.. இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் தேனிக்கள் இல்லாத வெறும் கூடு மட்டும் உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

அவர்களுக்கு யார் பொறுப்பு

அவர்களுக்கு யார் பொறுப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் வீட்டு தோட்டத்தில் தேனீக்கள் கூடுகட்டியுள்ளன. அவற்றின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு.. புலம் பெயர் மக்களுக்கு யார் பொறுப்பு என கேட்டு தேனீக்கள் நிரம்பியிருந்த கூட்டின் போட்டோவை ஷேர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X