மாஸ்டர் படத்துல நடிச்ச பிறகு.. நான் 'அவருடைய' ஃபேன் ஆயிட்டேன்.. பிரபல நடிகை ஓபன் டாக்!

சென்னை: மாஸ்டர் படத்தில் நடித்த பிறகு தான் அவருடைய ஃபேனாகி விட்டதாக நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

Recommended Video

Andrea Jeremiah special dedication for Chennai Police | Andrea

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய போதும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

லாக்டவுன் நேரத்தில் உயிரை பணயம் வைத்த வேலை பார்த்து வரும் போலீசாரை பாராட்டி அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்தார் ஆண்ட்ரியா.

மாஸ்டர் படம்

மாஸ்டர் படம்

2018 ஆம் ஆண்டு வெற்றி மாறனின் வட சென்னை படத்தில் நடித்தார் ஆண்ட்ரியா. அதன் பிறகு ஓராண்டாக படங்களில் தலைக்காட்டாமல் இருந்த ஆண்ட்ரியா விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும் வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர்.

ஃபேன் ஆயிட்டேன்

ஃபேன் ஆயிட்டேன்

ஆனால் ஆண்ட்ரியா என்ன கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்? யாருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்து பேசியிருக்கிறார் ஆண்ட்ரியா. அதாவது, மாஸ்டர் படத்தின் ஷுட்டிங்கிற்கு பிறகு நான் விஜய் சாருக்கு ஃபேன் ஆகிவிட்டேன் என கூறியிருக்கிறார்.

கார் சேஸிங் சீன்

கார் சேஸிங் சீன்

படத்தில் தங்களுக்கு ஒரு கார் சேஸிங் காட்சி உள்ளது என்றம் அந்த காட்சி தனக்கு மறக்க முடியாத காட்சி என்றும் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா. கடந்த மாதமே மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் லாக்டவுனால் அனைத்து பணிகளும் தடைபட்டதால் தற்போதுதான் மாஸ்டர் படத்தின் போஸ் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

தியேட்டரில் ரிலீஸ்

தியேட்டரில் ரிலீஸ்

இதனை தொடர்ந்து லாக்டவுனுக்கு பிறகு படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. இதனிடைய மாஸ்டர் படம் OTT தளத்தில் வெளியாகும் என்றும் தகவல் வெளியானது. ஆனால் என்ன ஆனாலும் தியேட்டரில்தான் படத்தை ரிலீஸ் செய்வது என தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ரியா மூலம் தகவல்

ஆண்ட்ரியா மூலம் தகவல்

மாஸ்டர் படம் குறித்து நாள்தோறும் ஒரு தகவல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் விஜய் டபுள் ஆக்ஷனில் நடித்திருக்கிறார் என கூறப்பட்டது. அதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் கதை உண்மைக் கதை என்றும் தகவல் பரவியது. இந்நிலையில் படத்தில் கார் சேஸிங் சீன் உள்ளது என்பது ஆண்ட்ரியா மூலம் தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X