ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில்‘’லாக்டவுன்’’.. ஐபோனில் எடுக்கப்பட்ட குறும்படம் !

சென்னை : நடிகர் மற்றும் உதவி இயக்குனரான ஆதவ் கண்ணதாசன் நடிகை ஆன்ட்ரியாவை வைத்து லாக்டவுன் என்கிற குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி உள்ளது.

நடிகர் ஆதவ் கண்ணதாசன் மாபெரும் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் கண்ணதாசனின் பேரனாவார். இவர் யுவன் யுவதி மற்றும் ஹரி தாஸ் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

Actress Andrea stars in short film lockdown

பொன்மாலை பொழுது என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி, யாமிருக்க பயமே , நமோ பூடட்மா, பகல் மற்றும் சமீபத்தில் பரத்தின் காளிதாஸ் ஆகிய படங்களில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது ஊரடங்கை பற்றியும் கொரோனோ பற்றியும் ஒரு குறும்படத்தை நடிகை மற்றும் பிரபல பாடகியான ஆன்ட்ரியாவை வைத்து இயக்கியுள்ளார். இந்த குறும்படத்திற்கு லாக்டவுன் என்ற தலைப்பு வைக்கபட்டு முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஆதவ் கண்ணதாசன் கூறுகையில், இந்த குறும்படம் முழுவதுமாக ஐபோனில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இது உண்மையிலேயே வியப்பான விஷயமாக பார்க்கப்படுகிறது. மொபைல் போனில் எடுக்கப்படும் படம் கேமரா அளவிற்கான தரத்தை கொடுக்குமா அப்படி கொடுத்தாலும் சரியாக கையாண்டு எடுக்கபட்டிருக்குமா என்ற கேள்விகள் ரசிகர்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.

Actress Andrea stars in short film lockdown

ஆதவ் கண்ணதாசன் இதற்கு முன் ஒலியும் ஒலியும் என்கிற குறும்படத்தை எழுதி தயாரித்து இருக்கிறார் அதை தாண்டி இரு படங்களில் உதவி இயக்குனராக கிடைத்த அனுபவம் என்று இவையெல்லாம் இணைந்து ஒரு எதிர்பார்பை இந்த லாக்டவுன் குறும்படத்திற்கு கொடுத்துள்ளது.

Actress Andrea stars in short film lockdown

இந்த முதல் பார்வை போஸ்டரை நடிகை ஆன்ட்ரியாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். முதல் பார்வையை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். மேலும் குறும்படம் எப்போது வரும் என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X